Newskadai.com
சினிமா வீடியோ

“ஆகஸ்ட் மாதம் தியேட்டர்களை திறக்கலாம்”… மத்திய அரசின் பரிந்துரையால் நொந்து போன திரையரங்கு உரிமையாளர்கள்…!

Share this:

நாடு முழுவதும் தீயாய் பரவி வரும் கொரோனா தொற்றால் சினிமாத்துறை மிகப்பெரிய பின்னடைவை சந்தித்து வருகிறது. கொரோனா லாக்டவுன் காரணமாக கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனால் தமிழ், தெலுங்கு, இந்தியில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட டாப் ஸ்டார்களின் படங்கள் ரிலீஸ் செய்யப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இதனால் தியேட்டர் உரிமையாளர்களும், தயாரிப்பாளர்களும் கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகின்றனர்.

சரி, தியேட்டர்கள் தான் திறக்கவில்லை ஆன்லைன் தளங்களிலாவது படத்தை வெளியிடலாம் என்றால் தியேட்டர் உரிமையாளர்களும், மல்டிபிளாக்ஸ் உரிமையாளர்கள் போர்க்கொடி தூக்கி நிற்கிறார்கள். அவர்களின் பலத்த எதிர்ப்பையும் மீறி தமிழில் “பொன்மகள் வந்தாள்”, “பெண் குயின்” ஆகிய படங்கள் வெளியாகின. மேலும் பல்வேறு படங்கள் அடுத்தடுத்து ஓடிடி தளத்தில் வெளியாக தயாராக உள்ளது.

இந்நிலையில் நாடு முழுவதும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் 31ம் தேதி வரை தியேட்டர்களை திறக்கலாம் என மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது. ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறை சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் இதனை தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை செயலாளர் அமித் கரே தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஒரு இருக்கைக்கும் மற்றொரு இருக்கைக்கும் இடையே 2 மீட்டர் இடைவெளி, இரண்டு வரிசை சீட்டிற்கு இடையே ஒரு வரிசையை காலியாக விட வேண்டும் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 25 சதவீத பார்வையாளர்களுடன் தியேட்டர்களை திறப்பது, மூடியிருப்பதைவிட கொடுமையானது என தியேட்டர் உரிமையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


Share this:

Related posts

அந்த தயாரிப்பாளருக்கு கொரோனா தொற்று இல்லையாம்… தீயாய் பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி…!

AMARA

சினிமா படப்பிடிப்புகளை நடத்த அனுமதி… வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு…!!

AMARA

“லவ் யூ தலைவா”… விஜய் ரசிகர் தூக்கிட்டு தற்கொலை… உருக்கமான கடைசி பதிவு…!!

THAVAMANI NATARAJAN

வெள்ள நீரில் பயணம் செய்ய வித்தியாசமான வாகனம் இதோ….!! வைரல் வீடியோ

NEWSKADAI

கார்ல வந்து எதுக்குடா உனக்கு இந்த கேவலமான பொழப்பு… அசிங்கப்பட்டான் ஆபீசர் வீடியோ…

NEWSKADAI

உடனே தடை பண்ணுங்க… இல்லாவிட்டால் தமிழகத்தில் போராட்டம் வெடிக்கும் … வைகோ கொந்தளிப்பு!

AMARA