Newskadai.com
அரசியல்

“திமுகவில் இருந்து நீக்கியது மகிழ்ச்சியளிக்கிறது”… அறிவாலயத்திற்கு அதிர்ச்சி கொடுத்த கு.க.செல்வம்…!!

Share this:

ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏ கு.க.செல்வம் கடந்த சில தினங்களுக்கு முன்பு டெல்லியில் பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்து சர்ச்சையை உருவாக்கியது.இதனையடுத்து அன்று அறிவாலயத்தில் நடைபெற்ற அவசர ஆலோசனைக்கு பிறகு கு.க.செல்வத்தை திமுக தலைமை நிலைய அலுவலகச் செயலாளர் மற்றும் தலைமை செயற்குழு உறுப்பினர் பொறுப்புகளிலிருந்து விடுவிக்கப்படுவதாகவும், அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்படுவதாகவும் திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்தார்.

ஆனால் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த கு.க.செல்வமே, தான் பாஜகவில் இணையவில்லை என்றும், தொகுதி பிரச்சனை குறித்து முறையிட வந்ததாகவும் தெரிவித்தார். மேலும் திமுக தலைமை மேற்கொள்ளும் நடவடிக்கையை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக கூறினார். அத்துடன் நிறுத்தாமல், கடந்த 5ம் தேதி ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழா அன்று கமலாலயத்தில் நடைபெற்ற பூஜையிலும் பங்கேற்று திமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.

இதையடுத்து நேற்று திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், “திமுக தலைமை நிலைய அலுவலகச் செயலாளர் மற்றும் தலைமைச் செயற்குழு உறுப்பினர் பொறுப்புகளிலிருந்து விடுவிக்கப்பட்ட கு.க.செல்வம் திமுக கட்சிக் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால், அவரிடம் கேட்கப்பட்ட விளக்கத்திற்கு அளித்த பதில் ஏற்றுக் கொள்ளும்படி இல்லாத காரணத்தால், அவர் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நிரந்தரமாக நீக்கி (Dismiss) வைக்கப்படுகிறார்” என அறிவித்தார்.

இந்நிலையில் தான் கட்சியில் இருந்து நீக்கப்பட்டது குறித்து எம்.எல்.ஏ. கு.க.செல்வம் கருத்து தெரிவித்துள்ளார். ஆயிரம் விளக்கு தொகுதியில் மீண்டும் போட்டியிட்டாலும் தனக்கு தான் வெற்றி கிடைக்கும் என தெரிவித்த அவர், கட்சி சார்பற்ற எம்.எல்.ஏ.வாக தொடர்ந்து செயல்படுவேன் என்றும், மக்கள் பணியை தொடர்ந்து செய்வேன் என்றும் கூறினார். மேலும் எந்த கட்சியில் ஆயிரம் விளக்கு தொகுதிக்கு சீட் கொடுக்கிறார்களோ அவர்கள் சார்பில் போட்டியிடுவேன் என்றும், திமுகவில் இருந்து என்னை நீக்கியது ஜனநாயக படுகொலை என்றும் குற்றச்சாட்டிய கு.க.செல்வம், அங்கிருந்து நீக்கியது மகிழ்ச்சி அளிப்பதாகவும் சொல்லி அறிவாலயத்திற்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.


Share this:

Related posts

யாருக்கெல்லாம் கருப்பு பூஞ்சை தொற்று ஏற்பட வாய்ப்பு… சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் விளக்கம்…!

AMARA

இந்த 15 பொருட்களுக்கும் இதுதான் அதிகபட்ச விலை… தமிழக அரசு பிறப்பித்த அதிரடி உத்தரவு…!

AMARA

ஸ்டாலின் இதயத்தை நொறுக்கிய திடீர் மரணம்… மனமுடைந்து தவிப்பதாக உருக்கமான அறிக்கை….!!

AMARA

சூடுபிடிக்கும் தமிழகத் தேர்தல் களம்… கட்சி தாவும் பிரபலங்கள்…

MANIMARAN M

கொரோனா ஊரடங்கும், தளர்வுகளும் – இயல்புநிலைக்கு திரும்புகிறதா தமிழகம்..?

AFRIN

மத்திய அரசுடன் மல்லுகட்டும் எதிர்க்கட்சிகள்… EIA சட்டத்திற்கு எதிராக வலுக்கும் கண்டனங்கள்…!!

NEWSKADAI