Newskadai.com
அரசியல்

“பாஜகவில் இணையவில்லை”… திமுக எம்.எல்.ஏ. கு.க.செல்வம் அதிரடி விளக்கம்…!

Share this:

திமுக ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏ. கு.க. செல்வம் பாஜகவில் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், அவர் அதை முற்றிலும் மறுத்துள்ளார். இன்று காலை திமுக எம்.எல்.ஏ. கு.க.செல்வம், தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் உடன் டெல்லி புறப்பட்டுச் சென்றது பல்வேறு விவாதங்களை உருவாக்கியது. அதாவது தனக்கு பதவி கிடைக்காத அதிருப்தியில் கு.க.செல்வம், பாஜகவில் இணைவதற்காக டெல்லி சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகின.


திமுகவில் எப்போதும் கட்சி பதவிகளுக்கு சீனியர்களை தேர்வு செய்வது தான் வழக்கம். அப்படி சென்னை மேற்கு மாவட்ட செயலாளராக பதவி வகித்து வந்த ஜெ.அன்பழகன் கொரோனாவால் உயிரிழக்க அந்த பதவி தனக்கு தான் கிடைக்கும் என கனவு கண்டார் கு.க.செல்வம். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. இடையில் புகுந்த திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினால், அவருக்கு நெருக்கமான சிற்றரசு அந்த பதவியில் அமரவைக்கப்பட்டார். அதனால் அதிருப்தி அடைந்த கு.க.செல்வத்தை பாஜகவிற்கு வளைக்க முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகின.

அதன் படி இன்று மாலை டெல்லியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை, கு.க.செல்வம் சந்தித்தார். இதையடுத்து கு.க.செல்வம், ஜே.பி.நட்டா முன்னிலையில் திமுகவில் இணைந்ததாக தீயாய் தகவல்கள் பரவின. ஆனால் ஜே.பி.நட்டாவுடனான சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த கு.க.செல்வம், அதை முற்றிலும் மறுத்துள்ளார். தனது தொகுதி பிரச்சனைக்காக நட்டாவை சந்தித்ததாக கூறியுள்ள கு.க.செல்வம், திமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணையவில்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.


Share this:

Related posts

தேனியில் போஸ்டர்… ஓபிஎஸ் – இபிஎஸ் வீடுகளில் மாறி, மாறி அமைச்சர்கள் ஆலோசனை… அதிமுகவில் பதற்றம்…!!

AMARA

முஜே ஹிந்தி மாலும் நஹி ..! ஃப்ரூப் கரோ… எம்.பி.கனிமொழி ஆவேசம்..!

MANIMARAN M

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி சொன்ன ஓபிஎஸ்..!

MANIMARAN M

சீமானையும், ஹரி நாடாரையும் சும்மா விடாதீங்க… தற்கொலை முயற்சிக்கு முன் விஜயலட்சுமி வெளியிட்ட பரபரப்பு வீடியோ…!

NEWSKADAI

பாஜகவில் இணைந்தார் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை…!!

AMARA

பாஜக தலைவர் எல்.முருகனுடன் திடீர் சந்திப்பு… முதல்வர் வீட்டில் நடந்தது என்ன?

THAVAMANI NATARAJAN