பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தனது டிவிட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்தில், “ஐ ஏம் அ தமிழ் பேசும் இந்தியன்” என்ற வாசகம் அச்சிடப்பட்ட டி-சர்ட்டை அணிந்துள்ளார். யுவன் சங்கர் ராஜாவுடன் நிற்கும் நடிகர் சிரீஷ், “ஹிந்தி தெரியாது போடா” என்ற வாசகம் அச்சிடப்பட்ட டி-சர்ட்டை அணிந்துள்ளார்.
👍🏼👍🏼👍🏼 https://t.co/DhwrfJK1ca
— Raja yuvan (@thisisysr) September 5, 2020
கோலிவுட் பிரபலங்களும் இந்தி திணிப்பிற்கு தங்களுடைய எதிர்ப்பை வித்தியாசமான முறையில் தெரிவித்து வருகின்றனர். கனிமொழி எம்.பி. “இண்ட்ரெஸ்ட்டிங்” என்று யுவனுக்கு பதில் டிவிட் செய்துள்ளார்.
Interesting 👍@thisisysr @actor_shirish https://t.co/QUjQREnl19
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) September 5, 2020
யுவன், சிரிஷைத் தொடர்ந்து நடிகர் சாந்தனுவும் அவரது மனைவி கீர்த்தியும் இதே போன்று, “ஐ ஏம் அ தமிழ் பேசும் இந்தியன்” “இந்தி தெரியாது போடா” என்று அச்சிடப்பட்ட டி-சர்ட்டை அணிந்த புகைப்படங்களை தங்களது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
Back to தொழில் …. something interesting on the work front 😉 #KeepCalm #SpreadLove @KikiVijay #WithLoveShanthnuKiki pic.twitter.com/vg9Vx6Hy4S
— Shanthnu 🌟 ஷாந்தனு Buddy (@imKBRshanthnu) September 5, 2020