Newskadai.com
உலகம்

ட்ரம்பின் ஆட்சிக்கு வேட்டு வைக்கும் கொரோனா… இந்தியா கொடுத்த மலேரியா மாத்திரையால் சிக்கல்…!!

Share this:

உலக மக்களின் ஆரோக்கியத்தையும், பொருளாதாரத்தையும் கடுமையாக பாதித்து வரும் கொரோனா (covid-19), உலக அரசியலையும் ஆட்டிப்படைக்க தொடங்கியிருக்கிறது. கொரோனாவால் அமெரிக்கா, சீனா இடையே பனிப்போர் ஏற்பட்டுள்ளது உலகமறிந்த செய்தி. உலக நாட்டாமையாக செயல்படும் “டிரம்ப்” பின் பதவியையே கொரோனா காவு கேட்பது லேட்டஸ்ட் செய்தி.

பல டாக்டர்கள் ஒன்றிணைந்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கொரானா பரவலுக்கு எதிராக எடுத்து வரும் நடவடிக்கைகளை விமர்சித்தும், அவர் முன்னெடுத்த ஹைட்ராக்ஸி குளோரோக்குயின் மருத்துவ சிகிச்சை முறைக்கு எதிராகவும் செய்தி ஊடகங்களில் பேசினார்கள். இந்த வீடியோ அமெரிக்க முழுவதும் வைரலாகி வருகிறது. அமெரிக்க அதிபர் தேர்தல் நெருங்கி வருவதால், அமெரிக்க அரசியலில் ஹைட்ராக்ஸி குளோரோக்குயின் விவகாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.

இந்தியாவில் மலேரியா நோய்க்கு மருந்தாக பயன்பாட்டில் இருக்கும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்துகள் அமெரிக்கா உட்பட பல ஐரோப்பிய நாடுகளில் தடை செய்யப்பட்ட ஒரு மருந்து. கொரோனா காரணமாக அந்தத் தடையை உடைத்து இந்தியாவை மிரட்டி ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை அதிரடியாக இறக்குமதி செய்தார் அமெரிக்கா அதிபர் டிரம்ப்.

“இந்த மருந்தை பயன்படுத்தினால் பல உடல்நல கோளாறுகள் ஏற்படும். அதனால் ஹைட்ராக்ஸி குளோரோ குயின்-ஐ பயன்படுத்த வேண்டாம்” என்று அமெரிக்காவின் உணவு மருந்து நிர்வாகத்துறை கடந்த மாதமே டிரம்ப் நிர்வாகத்தை எச்சரித்திருந்தது. அமெரிக்காவில் தொடர்ந்து அதிகரித்துவரும் கொரோனா தொற்றினாலும், அதிகரித்துவரும் கொரோனா மரணங்களாலும், ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தினால் பயனில்லை என்ற முடிவுக்கு வந்த அமெரிக்க உணவு மருந்து நிர்வாகத்துறை இதை பயன்படுத்த வழங்கப்பட்டிருந்த அனுமதியை கடந்த மாதம் ரத்து செய்தது. குரோனா சிகிச்சையில் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்துகள் பலனளிக்கிறது என்பதற்கு விஞ்ஞான பூர்வமான எந்த ஆதாரமும் இல்லை என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து டிரம்ப் “நான் சிபாரிசு செய்தால் அவர்கள் அதை வேண்டுமென்றே நிராகரிக்கிறார்கள். நான் வேண்டும் என்று கூறுவதை வேண்டாம் என்று மறுப்பதையே அவர்கள் விரும்புகிறார்கள் “என்று உணவு மருந்து நிர்வாகத் துறையை சாடினார். இந்த விமர்சன வீடியோ அமெரிக்க எதிர்க்கட்சியினருக்கு வரப்பிரசாதமாக அமைந்திருக்கிறது. வரும் அதிபர் தேர்தலில் டிரம்ப் – ஐ தோற்கடிக்க கூடிய பிரம்மாஸ்திரம் ஆக அவர்கள் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் விவகாரத்தை கையாளுகின்றனர்.


Share this:

Related posts

வடகொரிய அதிபரை வச்சி செஞ்ச கொரோனா… முதல் நபருக்கு உறுதியானது தொற்று…!

NEWSKADAI

கதறி துடித்த இந்துக்கள்… உடனடி உத்தரவு போட்ட பக்ரைன் அரசு… மெய் சிலிர்க்க வைக்கும் உண்மை!!!

NEWSKADAI

அட்ரா சக்க : அமெரிக்க தேர்தல் களத்தில் இந்திய வம்சாவளி பெண்… உருவாக போகும் புது வரலாறு…!!

MANIMARAN M

டிரம்பை எச்சரித்த ஒபாமா… அனல் பறக்கும் அமெரிக்க அரசியல்…!!

MANIMARAN M

இந்த ஆண்டு முடியும் வரை யாரும் எங்கள் நாட்டிற்குள் வர வேண்டாம் : மலேசிய அரசு அதிரடி!!

MANIMARAN M

மெகா ஊழல்…. முன்னாள் பிரதமருக்கு 12 ஆண்டுகள் சிறை…!!

NEWSKADAI