Newskadai.com
தமிழ்நாடு

தாரமங்கலத்தில் பைக் ஓட்டி பழகும்போது பரிதாப விபத்து… பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகள்…

Share this:

கொரோனா ஊரடங்கினால் போக்குவரத்து அதிகம் இயங்காமல் இருந்த காலகட்டத்திலும் கூட ஒரு சில பகுதிகளில் விபத்துக்கள் ஏற்பட்டு வந்தன. ஊரடங்கு காலத்தில் பொது போக்குவரத்து முடக்கத்தினால் மக்களிடையே இருசக்கர வாகன பயன்பாடு அதிகரித்தது. கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பொது போக்குவரத்துக்கு அனுமதியளித்த பிறகு வாகன நெரிசல்களும், விபத்துக்கள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

இந்நிலையில் சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில் மளிகை கடை நடத்தி வந்த பழனிசாமி தன் மனைவி மல்லிகாவிற்கு இரு சக்கர வாகனம் ஓட்ட கற்றுக் கொடுப்பதற்காக இரவு 10 மணியளவில் தாராமங்கலம் புறவழிசாலைக்கு அழைத்து சென்றுள்ளார். பின்னர் பழனிசாமி தன் வாகனத்தின் பின் இருக்கையில் அமர்ந்துக் கொள்ள அவருடைய மனைவி வாகனத்தை ஓட்டிச் சென்றுள்ளார். இவர்களுக்கு பின்னால் வேகமாக வந்த லாரி ஒன்று இவர்கள் மீது அதிவேகத்துடன் மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டுள்ளனர். அந்த விபத்தில் கணவன், மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இருவரது உடல்களையும் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விபத்து ஏற்படுத்தி சென்ற லாரிக் குறித்து விசாரித்து வருகின்றனர்.

உயிரிழந்த பழனிசாமி முன்னாள் பேருராட்சி கவுன்சிலராக இருந்தவர் என்று விசாரனையில் தெரிய வந்துள்ளது. இந்த தம்பதியினருக்கு நேகா (12) என்ற மகளும், நந்தகிஷோர் (10) என்ற மகனும் உள்ளனர். இரு குழந்தைகளும் தற்போது ஆதரவன்றி தவித்து வருகின்றனர். எனவே வாகனம் ஓட்ட பழக பரந்த மைதானம் அல்லது வாகனங்கள் செல்லாத சாலைகளை தேர்ந்தெடுக்க வேண்டும். போக்குவரத்து உள்ள சாலையை பயன்படுத்தினால் இது போன்று விபத்துக்கள் ஏற்பட்டு பெரும் இழப்புகளை சந்திக்க நேரிடும். இனி யாரும் இதுபோன்ற தவறை செய்யமால் அரசின் சட்ட திட்டங்களை மதிப்போம் உயிரை காப்போம்.


Share this:

Related posts

மாதந்தோறும் மின்கட்டண அளவீடு… முதலமைச்சருடன் ஆலோசித்து முடிவு… அமைச்சர் தங்கமணி…!!

MANIMARAN M

கொரோனா தொற்று இல்லை… நலமுடன் இருக்கிறார் நல்லகண்ணு…

MANIMARAN M

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி சென்னையை தொடர்ந்து கோவையிலும் உண்ணாவிரதப் போராட்டம்..!!!

MANIMARAN M

கறி விருந்து: ஜலகையில் மேலும் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி?

NEWSKADAI

நீட் தேர்வு அச்சம்: கோவையில் மாணவி தூக்கிட்டு தற்கொலை… முடிவின்றி தொடரும் சோகம்…!!

MANIMARAN M

சேலத்தை குலை நடுங்க வைக்கும் ’கொரோனா’… பலி எண்ணிக்கையை பார்த்து பதறும் மக்கள்…!!

NEWSKADAI