Newskadai.com
தமிழ்நாடு

உயிரைக் கொடுத்து மனைவியை காத்த கணவன்… சோகத்தில் முடிந்த கோபம்…!

Share this:

கோபத்தில் எடுக்கும் எந்தவொரு முடிவும் சோகத்தில் முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக, கோவை மாவட்டம் அன்னூர் பகுதியில் ஒரு சம்பவம் நடந்தேறியுள்ளது. அன்னூர் தாலுகா ஓட்டார்பாளையம் ஊராட்சி கோபி ராசிபுரம் பகுதியை சேர்ந்தவர் தனபால் வயது 35,  இவரது மனைவி மோகனா வயது 28, இவர்களுக்கு  இரு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் குடிப்பழக்கம் உடைய தனபால் வழக்கம் போல் நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார்.

இவர்களுக்கிடையே கடும் வாக்குவாதம் நடந்துள்ளது. இதனை தொடர்ந்து வீட்டிற்கு அருகே தோட்டதத்தில் வசிக்கும் மாமனார்-மாமியாவிடம் மருமகள் மோகனா கணவர் குடித்து விட்டு வந்தது பற்றி புகார் அளித்துள்ளார். இரவு நேரம் என்பதால் பெரியவர்கள், காலையில் பேசிக்கொள்ளலாம் என சமாதானப்படுத்தியுள்ளனர். ஆனால் மோகனா சமாதானம் ஆகவில்லை, இதனிடையே  மோகனாவை பின்தொடர்ந்து வந்துள்ளார் தனபால், மேலும் கோபம் அடைந்த மோகனா அருகில் உள்ள கிணற்றில் குதித்துள்ளார். அதிர்ச்சி அடைந்த தனபால் மனைவியை காப்பாற்றும் நோக்கத்தில் அவரும் கிணற்றில் குதித்துள்ளார். மோகனா கிணற்றில் உள்ள மரக்கிளைகளை பிடித்து தொங்கியபடி கூச்சல் போட்டுள்ளார்.

கூச்சலை கேட்ட அக்கம் பக்கத்தினர் போலீஸ் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் அளித்துள்ளனர். தகவலின் பேரில் விரைந்த போலீசார், மயங்கிய நிலையில் தொங்கியபடி தவித்து கொண்டிருந்த மோகனாவை காப்பாற்றினர். பின்னர் தன்னை காப்பாற்ற கணவரும் கிணற்றில் விழுந்தார் என கூறியுள்ளார். கிணறு மிகவும் பழமையானது என்பதால் குறைந்த நீருடன் சேரும் சகதியுமாக இருந்துள்ளது. வெகுநேரம் தனபாலை மீட்கும் பணியில் தீயணைப்பை வீரர்கள் ஈடுபட்டனர், இரவு நேரம் என்பதால் தேடுதல் பணி நிறுத்தி வைக்கப்பட்டது. இதை தொடர்ந்து நேற்று முன்தினம் மாலை 3 மணி அளவில் கிணற்றில் சேற்றுக்குள் சிக்கி இருந்த தனபாலின் உடலை 18 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்டுள்ளனர். மோகனா சற்று கோபத்தை கட்டுபடுத்தி இருந்தால் அவரது கணவரை இன்று இழந்திருக்க வேண்டியதில்லை. இவர்களுக்கு நடந்த இச்சம்பவம் மற்றவர்களுக்கு ஒரு பாடமாக இருக்கட்டும்.


Share this:

Related posts

நெகட்டிவா? பாசிட்டிவா?… தனியார் மருத்துவமனையின் பித்தலாட்டத்தால் சிக்கித் தவிக்கும் குடும்பம்…!

NEWSKADAI

15 கோடி ரூபாய் செல்போன்கள் கொள்ளை… கண்டெய்னர் லாரியை வழிமறித்த கைவரிசை…!

THAVAMANI NATARAJAN

காரைக்காலில் நிபந்தனை ஜாமினில் வெளி வந்த பெண் தாதா தலைமறைவு…

MANIMARAN M

அதிரடி சோதனை : வேளாங்கண்ணியில் சிக்கியது தடைசெய்யப்பட்ட 100 கிலோ பொருட்கள்…!!

MANIMARAN M

#அNEETதி : நீட் தேர்வினால் மதுரை மாணவி தற்கொலை… அடுத்தடுத்த மரணத்தால் கொதிப்பில் தமிழகம்…

NEWSKADAI

தமிழகத்தில் அக்.1 முதல் “ஒரே நாடு : ஒரே கார்டு” திட்டம்…

MANIMARAN M