Newskadai.com
தமிழ்நாடு

’பெட்டு மாறியதால் டெட் பாடியானவர்’..! அரசு மருத்துவமனைக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்..!!

Share this:

கள்ளக்குறிச்சி மாவட்டம் தொட்டியத்தைச் சேர்ந்தவர் கொளஞ்சியப்பன் (55) என்பவர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரியில் தீவிர சிகிச்சைப் பிரிவில் கடந்த இரு தினங்களுக்கு முன் அனுமதிக்கப்பட்டார். கொரோனா தொற்று இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் மற்றொரு வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார். சிறிது நேரத்தில், திருக்கோவிலூர் சந்தைப்பேட்டையைச் சேர்ந்த பாலர்(52) என்பவரை சுய நினைவற்ற நிலையில் கொளஞ்சியப்பனை படுக்க வைத்த அதே படுக்கையில் அனுமதித்தனர். சிகிச்சை பலனளிக்காமல் அன்று இரவே பாலர் மரணமடைந்துள்ளார்.

அந்தப் படுக்கையில் இருந்த கொளஞ்சியப்பனின் நோயாளி விவரக் குறிப்பு(கேஸ்ஷீட்) மாற்றப்படாமல் இருந்ததால் இறந்த நபர் கொளஞ்சியப்பன் எனக் கருதி கொளஞ்சியப்பனின் உறவினர்களிடம் பாலரின் உடலை ஒப்படைத்தது மருத்துவமனை நிர்வாகம். இறுதிச் சடங்கின் போது கடைசி நேரத்தில் முகத்தை பார்த்ததால், பாலரின் உடலை அவர்களது உறவினர்களிடம் ஒப்படைத்தனர் கொளஞ்சியப்பனின் குடும்பத்தினர்.

இந்த விவகாரம் நாளிதழ்களில் வெளிவந்ததால் அதை அடிப்படையாக வைத்து மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது. இன்னும் 2 வாரத்தில் இந்த விவகாரம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யுமாறு மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


Share this:

Related posts

மறியலில் சிக்கிய அமைச்சர் கார்… ஆவேசமடைந்த மக்கள்… திருப்பத்தூரில் பரபரப்பு…!

AMARA

6 மாவட்டங்களில் அடித்து வெளுக்கப்போகும் மழை… கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு எச்சரிக்கை…!

AMARA

அரிசி, பருப்பு வாங்க எவ்ளோ நேரம் நிக்கிறது..? சாலை மறியலில் இறங்கிய பொது மக்கள்…

MANIMARAN M

நீட் தேர்வு அச்சம்: கோவையில் மாணவி தூக்கிட்டு தற்கொலை… முடிவின்றி தொடரும் சோகம்…!!

MANIMARAN M

தூக்கத்தில் நடந்த சோகம்… தீயில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி…!!

THAVAMANI NATARAJAN

கோட்டையில் கொடியேற்றினார் முதல்வர்… அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு அசத்தல்…!!

THAVAMANI NATARAJAN