Newskadai.com
தமிழ்நாடு

கடலூரில் நடந்த திடுக்கிடும் சம்பவம்… ஆற்றங்கரையோரத்தில் கிடந்த பைக்குள் காத்திருந்த அதிர்ச்சி…!!

Share this:

கடலூர் மாவட்டம் கெடிலம் ஆற்றங்கரையோரத்தில் மனித கால் ஒன்று துண்டிகப்பட்டு வீசி எறியப்பட்டுள்ளனர். இதனை கவனித்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அங்கு துண்டிக்கப்பட்ட காலை சோதனையிட்டு காலுக்கு சொந்தக்காரர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தினர். மேல்புவனகிரியை சேர்ந்த கணபதி என்பவரின் கால் தான் என்பது விசாரணையில் தெரியவந்தது. இந்த நிலையில் அவர் வெகுநாட்களாக சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

மேலும் படிக்க: http://வாபஸ் வாங்குறீயா இல்ல அபராதம் போடவா?… ரஜினிக்கு அதிரடி எச்சரிக்கை விடுத்த ஐகோர்ட்…!

ஆனால் சர்க்கரையின் அளவு அதிகரித்து வந்ததால் கணபதியின் வலது காலை துண்டிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதன் அடிப்படையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வள்ளி விலாஸ் மருத்துவமனையில் நடைபெற்ற அறுவை சிகிச்சையில் கால் அகற்றப்பட்டுள்ளது. துண்டிக்கப்பட்ட காலை முறையாக அப்புறப்படுத்தாமல் மருத்துவ ஊழியர்கள் கெடிலம் ஆற்றின் கரையில் வீசியுள்ளனர்.

இதனை அறிந்த போலீசார் வள்ளி விலாஸ் மருத்துவமனை நிர்வாகத்தை தொடர்பு கொண்டு எச்சரித்துள்ளனர். வள்ளி விலாஸ் மருத்துவமனை நிர்வாகத்தினர் அதனை அங்கேயே புதைத்து விட்டு சென்றதை மக்கள் ஏற்க மறுத்தனர். மீண்டும் தோண்டி அக்காலை அப்புறப்படுத்த வேண்டும் என்றும், வள்ளி விலாஸ் மருத்துவமனையின் மேல் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.


Share this:

Related posts

வேளாண் மசோதாவை எதிர்த்து கிருஷ்ணகிரியில் விவசாயிகள் போராட்டம்…!

MANIMARAN M

நீட் தேர்வில் அடித்து நொறுக்கிய ஆடு மேய்ப்பவரின் மகன்… அரசு பள்ளி மாணவனின் அசத்தல் சாதனை…!

THAVAMANI NATARAJAN

கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு இன்று முதல் ஆன்லைன் விண்ணப்பம்…!!

NEWSKADAI

சென்னையில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா… ஒரே நாளில் 1182 பேருக்கு தொற்று உறுதி…!!

NEWSKADAI

நாகையில் அர்ச்சகர் வீட்டில் அரங்கேறிய கொள்ளை… 40 சவரன் நகைகள் திருட்டு…!!

MANIMARAN M

நாகையிலும் விவசாயிகளின் வயிற்றில் அடித்த போலி விவசாயிகள்…

MANIMARAN M