Newskadai.com
லைஃப் ஸ்டைல்

ஏற்றம் தரும் ஏகாதசி விரதம்… எப்படி கடைபிடிக்க வேண்டும் தெரியுமா?

Share this:

பெருமாளை நினைத்து பக்தர்கள் மேற்கொள்ளும் முக்கியமான விரதங்களில் ஒன்று ஏகாதசி விரதம். இந்த விரதத்தை கடைபிடிப்பவர்களுக்கு சகல சந்தோசங்களும் கிடைக்கும், தொட்டதெல்லாம் வெற்றி பெறமுடியும் என்பது ஐதீகம்.

Ekadasi

வைகுண்ட ஏகாதசி என்பது மிக முக்கியமான விரதமாகும். வருடமுழுவதும் வரும் ஏகாதசியில் விரதம் இருக்க முடியாதவர்கள், மார்கழி மாதத்தில் வரும் வைகுண்ட ஏகாதசி அன்று ஒருநாளாவது விரதமிருந்து பெருமாளை  தரிசிப்பது சிறப்பு.

வைகுண்ட ஏகாதசியை முக்கோடி ஏகாதசி என அழைக்கப்படுகிறது .ஏகாதசி விரதமிருப்பதால் சகல செல்வங்களும் கிடைக்கும் தீராத நோய்கள் தீரும் உடல் ரோக்கியம் அடைய முடியும் என்பது நம்பிக்கை.

ஏகாதசி விரதம் எப்படி துவங்குவது…

ஏகாதசிக்கு முதல் நாள் தசமி அன்றே ஒருவேளை மட்டுமே உணவு உட்கொள்ள வேண்டும், முடியாதவர்கள் துளசி நீர் அருந்திக்கொள்ளலாம். ஏழு துளசி இலைகளை தண்ணீரில் போட்டு வைத்து அதை சிறிது, சிறிதாக பெருமாளை துதித்து சாப்பிடலாம். அடுத்த நாளான ஏகாதசியன்று அதிகாலை நீராடி பெருமாளை வணங்கி விரதத்தை மேற்கொள்ளவேண்டும்.

மேலும் படிக்க: http://வீட்டிலேயே ஆடு வளர்த்தோம், கோழி வளர்த்தோம்.. இப்ப முத்தும் வளர்க்கலாம்…

அன்று முழுவதும் உணவு எடுத்துக்கொள்ளக்கூடாது, அன்று இரவு முழுவதும் விழித்திருந்து ரங்கநாதர் ஸ்துதி, விஷ்ணு பாடல்கள் புராண நூல்களை படிப்பது
சிறந்தது. படிக்க முடியாதவர்கள் பெருமாளை மனதில் நினைத்து அவருடைய நாமங்களை ஜபித்தபடி வழிபடலாம். இந்த விரதத்தை அனுஷ்டிப்பதால் மனிதனின் மனதில் இருக்கும் கோபம், குரோதம், மாச்சர்யம் ஆகிய தீய குணங்கள் விலகி தூய்மை குடிகொள்ளும்.

விரதமிருப்பது எவ்வளவு முக்கியமோ அதே அளவு விரதத்தை முடிப்பதும் முக்கியம்.

எவ்வாறு விரதத்தை முடிக்கலாம்?

ஏகாதசிக்கு அடுத்த நாள் துவாசி அன்று தான் விரதத்தை முடிக்க வேண்டும் உணவு உண்ணாமல் இருந்தவர்கள் துவாசி அன்று முதலில் துளசி தீர்த்தை அருந்த வேண்டும். அதன் பிறகு பெருமாளுக்கு படைத்த உணவை பிரசாதமாக உண்ணலாம்.

மேலும் படிக்க: http://குழந்தை பேறு தரும் சஷ்டி விரதம்… எப்படி, எங்கு கடைபிடிக்க வேண்டும் தெரியுமா?

குறிப்பு :

உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள், கர்ப்பிணிபெண்கள், வயதானவர்கள் மற்றும் சிறுவர்கள் உடல் நலம் கருதி இவ்விதம் மேற்கொள்ள வேண்டாம், அதற்கு பதிலாக பெருமாளை தினைத்து மனதை தூய்மையாக வைத்திருந்து வணங்குவதே சிறப்பு.


Share this:

Related posts

“ஆடி பட்டம் தேடி விதை”… முன்னோர்கள் சொன்ன பழமொழிக்கு அர்த்தம் என்ன தெரியுமா?

MANIMARAN M

கார்மேக வண்ணா… எங்கள் கண்ணா… ஓடி வா கிருஷ்ணா… உலகமே உன் கோகுலம்!

THAVAMANI NATARAJAN

மக்களே உஷார்: இதுவும் கொரோனா அறிகுறிகள்தான்… மருத்துவர் விளக்கம்

MANIMARAN M

இன்னைக்கு இந்த ராசிக்காரங்களுக்கு எல்லாம் செம்ம தூளுங்க… ராசி பலன் சொல்லுறத கேளுங்க…!!

NEWSKADAI

“தங்கமே உன்னத்தான் தேடி வந்தேன் நானே”… தங்கத்தை பற்றி யாரும் அறிந்திடாத தகவல்கள்…!

NEWSKADAI

8 மாவட்டங்களை தட்டித்தூக்கப் போகும் கனமழை… மீனவர்களுக்கும் எச்சரிக்கை…!!

THAVAMANI NATARAJAN