Newskadai.com
தமிழ்நாடு லைஃப் ஸ்டைல்

ஈசியா செல்போனிலேயே இ-பதிவு செய்வது எப்படி? எளிமையான வழிமுறைகள் இதோ..!!

Mobile E-Pass
Share this:

ஆன்லைன்னில் இபாஸ் பெறுவதற்குப் அரசு புதிய நடைமுறைகளை அறிவித்துள்ளது. அத்தியாவசிய பணிகளுக்காக மாவட்டங்களுக்கு உள்ளேயும், மாவட்டங்களுக்கு இடையேயும் பயணிக்க இ-பாஸ் தேலையில்லை, இ பதிவு செய்தால் மட்டுமே போதுமானது எனதெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

  • https://eregister.tnega.org/#/user/pass என்ற இந்த லிங்கை அழுத்தினால் வெளிநாட்டிலிருந்து தமிழ்நாட்டிற்குள் வருபவர்கள் மற்றும் மற்றவர்கள் (மாவட்டத்திற்குள், மற்ற மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்குள் தனிநபர் பயணப் பதிவு) என இரண்டில் உங்கள் பயணத்தை தேர்ந்தெடுக்கவும்

  • அடுத்த உங்கள்மொபைல் எண்ணை பதிவு செய்து, கேப்சா எண்ணை டைப் செய்து Send OTP அழுத்துங்கள்.

Tamilnadu E-pass


  • உங்கள் மொபைலுக்கு வரும் OTP யை பதிவிட்டு LOGIN செய்துகொள்ளவேண்டும்

  • அடுத்து வரும் விண்ணப்பத்தில் தாங்கள் பயணிக்கும் தேர்வை கிளிக் செய்யுங்கள்

  • அடுத்து பெயர், முகவரி (வீடு மற்றும் செல்லுமிடம்) பயண வரம்பு மாவட்டங்களுக்கு இடையே அல்லது மாநிலங்களுக்கு இடையே என்ற தேர்வைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

  • அதேபோல் பயணத்தின் நேரம் எண்ணிக்கை ஆகியவற்றை பூர்த்தி செய்ய வேண்டும்.

  • அடுத்து பயணிப்பவர்களின் விவரம், வாகன விவரம் அடையாள அட்டை ஆகியவற்றையும், பயணத்திற்கான காரணத்தையும் டைப் செய்யவும்

  • மருத்துவ அவசர நிலை என்றால் மருத்துவச் சான்று அல்லது ஆவணம் வேண்டும்

  • திருமணத்திற்காக என்றால் திருமண அழைப்பிதழை சமர்ப்பிக்க வேண்டும்.

  • இ பாஸ் பெறுவதற்கு ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பிக்கலாம்.

  • விவரங்கள் அனைத்தும் நிரப்பப்பட்டதும் தங்கள் ஆவணங்கள் மற்றும்மற்ற விபரங்கள் சரிபார்க்கப்படும். இவை அனைத்தும் சரியென உறுதி செய்யப்பட்டதும் இ -பாஸ் வழங்கப்படும்.

Mobile E-Pass

இ-பாஸ் விண்ணப்பிக்கும்போது சரியான தகவல்களை மட்டும் குறிப்பிடுங்கள், விண்ணப்பதாரரும் பயணம் செய்கிறார் என்றால் அவர் பெயரும் பயணம் செய்வோரின் பட்டியலில் இடம்பெற வேண்டும்.

உங்களின் விண்ணப்பம் வெற்றிகரமாக சமர்ப்பிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளபட்டதும் உடனடியாக குறிப்பு எண்ணுடன் SMS மற்றும் Email (மின்னஞ்சல்) அனுப்பப்படும்.


மற்ற இ-பாஸ் சந்தேகங்களுக்கு அணுக வேண்டிய எண்கள்: 1070, 1072, 1800 425 1333

இ-பாஸ் Link https://eregister.tnega.org/#/user/pass



Share this:

Related posts

மோடி திட்டத்தில் கேடித்தனம்… நானும் ”விவசாயிதான்” என்று கோடிகணக்கில் கொள்ளை…

THAVAMANI NATARAJAN

அரசு நூலகங்கள் செயல்படும்…. தமிழக அரசு அறிவிப்பு…

MANIMARAN M

”18லாம் பத்தாது… 21 கண்டிப்பா வேணும்” மத்திய அரசிடம் கறார் காட்டும் ராமதாஸ்

THAVAMANI NATARAJAN

கொரோனா பீதி: கோவையை விட்டு கூட்டம், கூட்டமாக வெளியேறும் மக்கள்… திணறும் போலீசார்…!

NEWSKADAI

பேருந்து கட்டணம் உயர்த்தப்படாது : அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உறுதி…

MANIMARAN M

ஈ-பாஸால் எல்லாம் நாசமா போச்சு: குமுறும் விவசாயிகள், சிறு தொழில் முனைவோர்…

MANIMARAN M