Newskadai.com
இந்தியா

கனமழையால் அரங்கேறிய கோர விபத்து… கோழிக்கோடு விமான நிலையத்தில் நடந்தது என்ன??

Share this:

கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் விபரீதமான சம்பங்கள் நடந்தேறியுள்ளதை நாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். அந்த வரிசையில் ஒன்றாக நேற்று இரவு கோழிக்கோடில் நடந்த விமான விபத்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கேரளா கோழிக்கோடு விமான நிலையித்தில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தரையிரங்குகையில் விபத்துக்குள்ளாகியது. துபாயிலிருந்து வந்தே பாரத் திட்டத்தின் மூலம் 174 பயணிகள், 10 குழுந்தைகளை ஏற்றிக்கொண்டு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் கேரளா மாநிலத்தின் கோழிக்கோடு நோக்கி வந்தது.  நேற்று இரவு சுமார் 7.40 மணி அளவில் கோழிக்கோடு விமான நிலையத்தில் விமானம் தரையிரங்க முற்பட்ட போது, கனமழை பெய்து வந்ததால் சிரமம் ஏற்பட்டுள்ளது.

 இரண்டு முறை முயற்சித்தும் தரையிரக்குவதில் சிக்கல் நிலவியது. இதனை தொடர்ந்து மூண்றாவது முறையாக 10 ஆவது ஓடு தளத்தில் தரையிறக்க முயன்று உள்ளனர். அப்போது விமானம் சறுக்கி ஓடுதளத்தை கடந்து சென்றுள்ளது. விமானி கட்டுப்பாட்டை இழந்துள்ளார். இந்நிலையில் விமானம் சறுக்கியபடி 30 அடி பள்ளத்தில் விழுந்தது. இதனால் விமானம் இரண்டாக உடைந்துள்ளது. தலைமை விமானி தீபக் வசந்த் சாத்தே தனது உயிரை தந்து பல உயிர்களை காப்பாற்றி உள்ளார்.

இவ்வாறு விபத்து நடப்பதற்கு காரணம் அங்குள்ள விமான நிலையத்தின் ஓடுதளம் டேபிள் டாப் வடிவமைப்பில் கட்டப்பட்டுள்ளது தான் எனக்கூறப்படுகிறது. மேலும் மலைப்பாங்கான பகுதிகளில் உள்ள இந்த விமான நிலையத்தின் முடிவில் பள்ளங்கள் இருப்பதையே டேபிள் டாப் வடிவமைப்பு என்கிறார்கள். இந்த விபத்தில் 19 பேர் உயிரிழந்துள்ளனர். 123 பேர் காயமடைந்துள்ளனர். அதில் 17 பேருக்கு படுகாயம் அடைந்துள்ளனர்.


Share this:

Related posts

கொரோனாவிலிருந்து மீண்டார் உள்துறை அமைச்சர் அமித் ஷா…. கொண்டாட்டத்தில் பாஜக தொண்டர்கள்…!!

NEWSKADAI

வாகன ஓட்டிகளே உஷார்: பெட்ரோல் பங்குகளில் இப்படியும் நூதன முறையில் மோசடி…!!

MANIMARAN M

சரக்கில் சானிடைசர் கலந்தடித்த 10 ‘குடி’மகன்கள் பலி…. ஆந்திராவில் அரங்கேறிய பரிதாபம்…!!

NEWSKADAI

ஸ்வீடனில் எதிரொலித்த தமிழக மாணவர்களின் கூக்குரல்… நீட் தேர்வுக்கு எதிராக முழங்கிய கிரேட்டா…!!

MANIMARAN M

புதிதாக 15 மருத்துவக் கல்லூரிகள் திறக்க அனுமதி… மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு…!!

MANIMARAN M

ஆதார் விவரங்களை மாற்ற இனி கட்டணம்… மத்திய அரசு அறிவிப்பு…

MANIMARAN M