Newskadai.com
தமிழ்நாடு

வாடகை கேட்ட வீட்டு உரிமையாளருக்கு கத்திக்குத்து..!!!

Share this:

சென்னை சூளைமேட்டில் சந்திரமோகன் என்பவருக்கு சொந்தமான வீட்டில் நாராயணன் என்பவர் வாடகைக்கு குடியிருந்து வருகிறார். கொரோனா தொற்று பரவல் காரணமாக ஊரடங்கால் வேலையில்லாமல் இருப்பதால் கடந்த 5 மாதங்களாக நாராயணன் வீட்டு வாடகை தரவில்லை என கூறப்படுகிறது, இந்நிலையில் நேற்று இரவு நாராயணன் குடிபோதையில் இருந்த நிலையில் சந்திரமோகன் வீட்டு வாடகை கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் நடந்துள்ளது.

இருவரின் சத்தம் கேட்டு சந்திரமோகனின் மனைவி மற்றும் மகன் வெளியில் வந்துள்ளனர். இந்த நிலையில் போதையில் இருந்த நாராயணன் திடீரென அருகில் இருந்த கத்தியை எடுத்து மூவரையும் சரமாரியாக குத்தியுள்ளார், இதில் சம்பவ இடத்திலையே வீட்டு உரிமையாளரின் மனைவி உயிரிழந்தார். படுகாயம் அடைந்த சந்திரமோகன் மற்றும் அவருடைய மகன் இருவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். தகவலறிந்து வந்த போலீசார் நாராயணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Share this:

Related posts

உயிரைக் கொடுத்து மனைவியை காத்த கணவன்… சோகத்தில் முடிந்த கோபம்…!

THAVAMANI NATARAJAN

மீண்டு(ம்) வந்தது கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனை… தமிழகத்தில் தொடங்கியது ஆய்வு…!!

THAVAMANI NATARAJAN

குப்பைத் தொட்டியில் வெள்ளிக் கிரீடம் : தூய்மை பணியாளரின் நேர்மை..!!!

MANIMARAN M

மோடி திட்டத்தில் மோசடி: கிருஷ்ணகிரியில் இதுவரை ரூ.1.76கோடி மீட்பு…!!

NEWSKADAI

வரும் 21-ஆம் தேதி முதல் பள்ளிகளைத் திறக்க மத்திய அரசு அனுமதி

THAVAMANI NATARAJAN

ஈ-பாஸால் எல்லாம் நாசமா போச்சு: குமுறும் விவசாயிகள், சிறு தொழில் முனைவோர்…

MANIMARAN M