Newskadai.com
தமிழ்நாடு விளையாட்டு

“Home of Dhoni Fan”- “விசில் போடு”- வெறித்தனமான ரசிகரின் ஒரு சூப்பர் டூப்பர் காணிக்கை…

Home of Dhoni Fan
Share this:

சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியின் கேப்டன் தோனிக்கு பல கோடி ரசிகர்கள் உள்ளனர். அனைத்து இந்திய பிரீமியர் லீக் (ஐபிஎல்) அணிகளிலும் சிஎஸ்கே மிகப்பெரிய ரசிகர் பட்டாளங்களை கொண்டதாகும்.

Home of Dhoni Fan

அதிலும் தோனிக்கு தமிழகத்தில் பெரும் ரசிகர்கள் கூட்டமே இருக்கின்றது. அந்த ரசிகர் கூட்டத்தில் ஒருவர் தான் நம்ம அரங்கூர் கோபிகிருஷ்ணன். கடலூர்ர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள அரங்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோபி கிருஷ்ணன். இவர் கேப்டன் தோனியின் டைஹார்ட் ஃபேன்.

இவரும் இவரது குடும்பத்தினரும் அவர்கள் வசிக்கும் வீட்டை “ஹோம் ஆஃப் தோனி ஃபேன்” (தோனி ரசிகரின் வீடு) என்று அழைக்கின்றனர். துபாயில் வேலை செய்து வரும் தோனியின் பக்தர் கோபி கிருஷ்ணன் ஒன்றரை லட்சம் ரூபாய் செலவில் தன் வீட்டு சுவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வண்ணமான மஞ்சள் நிறத்திற்கு மாற்றியுள்ளார்.

Home of Dhoni Fan

அந்த சுவர்களில் தோனியின் உருவப்படங்களும், சென்னை சூப்பர் கிங்ஸ், விசில் போடு என்ற வாசகங்களும் வரையப்பட்டுள்ளன. தல தோனி மீது கொண்ட வெறித்தனமான அன்பினால் தங்களது வீட்டிற்கு “Home of Dhoni Fan” என்று பெயரிட்டு பார்ப்பவர்களை ஆச்சர்யப்பட வைத்துள்ளார்.

Home of Dhoni Fan

இத்தகைய வெறித்தனமிக்க ரசிகரின் இந்த வீட்டை பொது மக்கள் வந்து பார்வையிட்டு செல்கின்றனர். கோபி கிருஷ்ணின் இந்த அன்பினை அறிந்து சென்னை சூப்பர் கிங்ஸின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் இவர்கள் குடும்பத்தினரை பாராட்டி பதிவிடப்பட்டிருக்கிறது,

அதில் சூப்பர் ஃபேன் கோபி கிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினர் தமிழ்நாட்டின் அரங்கூரில் உள்ளனர். ஒரு சூப்பர் டூப்பர் காணிக்கை.. மஞ்சள் நிறம் மூலம் நம் இதயங்கள் நிரம்புகிறது, விசில்போடு என்றும் கோபி கிருஷ்ணன் குடும்பம் மற்றும் அந்த வீட்டின் புகைப்படங்களையும் இணைத்து பதிவிடப்பட்டுள்ளது.


Share this:

Related posts

சேலம் மக்களே உஷார்: இந்த தனியார் மருத்துவமனைக்கு கொரோனா சிகிச்சைக்கு போகாதீங்க…!!

THAVAMANI NATARAJAN

இ-பாஸ் ரத்து… பொது போக்குவரத்து தொடக்கம்… அதிரடி அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர்….!!

AMARA

சேலத்திலும் மோடி திட்டத்தில் மோசடி : அதிகரிக்கும் பல கோடி ரூபாய் முறைகேடுகள்…

MANIMARAN M

வலுவடையும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்… துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றம்…!

NEWSKADAI

“இனி மணல் கடத்தல் வழக்கில் சிக்கினால்”… அதிரடி உத்தரவை பிறப்பித்து அதிரவைத்த உயர் நீதிமன்றம்…!!

THAVAMANI NATARAJAN

மதுரவாயல் திருடனுக்கு “அயர்லாந்திலிருந்து” ஆப்பு… ‘கோலம்’ போடாத வீட்டிற்குள் நுழைந்தவனை கொத்தாக தூக்கிய போலீஸ்…!

THAVAMANI NATARAJAN