Newskadai.com
தமிழ்நாடு

சல்யூட் : தமிழகத்தைச் சேர்ந்த 5 பெண் காவல் ஆய்வாளர்களுக்கு கிடைத்த உயரிய கெளரவம்…!!

Share this:

குற்ற வழக்குகளில் சிறப்பாக விசாரணை புரியும் அதிகாரிகளை கௌரவிப்பதற்காக 2018 ஆம் ஆண்டு முதல் “மத்திய உள்துறை அமைச்சரின் பதக்கம்” விருது வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாண்டு குற்ற வழக்குகளில் சிறப்பாக விசாரணை நடத்திய சிபிஐ அதிகாரிகள், காவல்துறையினர் 121 பேருக்கு இவ்விருது வழங்கப்படுகிறது. இதில் 21 பேர் பெண்கள் என்பது சிறப்பு. தமிழகத்தைச் சேர்ந்த காவல்துறையினர் 6 பேர் இவ்விருதை பெறுகின்றனர். ஜி.ஜான்சிராணி, எம் . கவிதா, ஏ.கலா, சி. சந்திரகலா, ஏ.பொன்னம்மாள், ஆகிய ஐந்து பெண் ஆய்வாளர்களும் வினோத்குமார் என்கிற துணை ஆய்வாளருக்கும் விருது வழங்கப்பட உள்ளது. 

சிறந்த புலனாய்வுக்கான மத்திய அரசின் விருதை பெறும் பிற மாநிலங்கள் கேரளா 7 பேர், மேற்கு வங்காளம் 7 பேர், உத்தரப்பிரதேசம் 8 பேர், மகாராஷ்டிரா 10 பேர், மத்திய பிரதேசம் 10 பேர், மற்றும் சிபிஐ 15 பேர். விருது பெறுபவர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா டுவிட்டரில், “நீதியை நிலைநாட்டுவதில் விரிவான விசாரணை முக்கிய பங்கு வகிக்கிறது. நடப்பு ஆண்டுக்கான பதக்கம் பெறுபவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.” என வாழ்த்தி பதிவிட்டுள்ளார்.


Share this:

Related posts

பிரதமர் கிசான் திட்டத்தில் முறைகேடு… அதிகாரிகள் அதிரடி விசாரணை…

MANIMARAN M

கட்டுபாடுகளை மீறுவோருக்கு கடும் தண்டனை : தமிழக அரசின் அவசர சட்டம்…

MANIMARAN M

ஆகஸ்ட் 17 முதல் அனைவருக்கும் இ-பாஸ்… அதிரடி அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர்…!!

AMARA

‘நீ கிறுக்குத்தனமா கேள்வி கேட்டால்’… லஞ்சம் குறித்த கேள்வியால் கடுப்பான வேளாண் துறை அமைச்சர்…!

AMARA

மன்னார்குடி ஃபேமிலியே தேவலாம் போல… தலை சுற்ற வைக்கும் பிஎஸ்பிபி பள்ளி பேக்ரவுண்ட்…!

NEWSKADAI

தொடரும் நீட் தேர்வு மரணங்கள்: கைக்கு வராத ஹால்டிக்கெட்… மன உளைச்சலில் மாணவி தற்கொலை..!!

MANIMARAN M