Newskadai.com
இந்தியா

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு கொரோனா தொற்று… மருத்துவமனைக்கு செல்லும் முன் கூறிய அறிவுரை…!!

Share this:

இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 17 லட்சத்து 57 ஆயிரத்து 393 ஆக அதிகரித்துள்ளது. தொற்றால் 37 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், 11 லட்சத்து 49 ஆயிரத்து 406  பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரவலை தடுக்க மார்ச் மாதம் முதலே ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், நாடு முழுவதும் 3ம் கட்ட தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க:http://அதிர்ச்சி… கொரோனா தொற்றுக்கு பெண் அமைச்சர் உயிரிழப்பு…!!

இன்று காலை உத்திரப்பிரதேச மாநில தொழில்நுட்ப கல்வித்துறை அமைச்சரான கமல் ராணிக்கு (62) கொரோனா தொற்றால் காலமானார். இந்த அதிர்ச்சியில் இருந்து பாஜகவினர் மீள்வதற்குள் உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அமித் ஷா சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள அமித் ஷா, ஆரம்ப கட்ட கொரோனா அறிகுறிகள் தென்பட்டதாகவும், அதையடுத்து மேற்கொண்ட பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். தற்போது வரை தனது உடல் நலம் நன்றாக இருப்பதாகவும், இருப்பினும் மருத்துவர்களின் அறிவுரையின் படி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக யாரெல்லாம் வந்து தன்னை சந்தித்தார்களோ அவர்கள் அனைவரும் தன்னைத் தானே தனிமைப்படுத்திக்கொள்ளும் படியும், கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் படியும் இந்தியில் பதிவிட்டுள்ளார்.

 


Share this:

Related posts

ரஷியாவின் கொரோனா தடுப்பூசி வரும் நவம்பர் மாதம் இந்தியாவில் கிடைக்க வாய்ப்பு…

MANIMARAN M

இறுதிக்கட்ட பரிசோதனையில் கொரோனா தடுப்பு மருந்து… இந்தியாவிற்கு கிடைத்த சூப்பர் வாய்ப்பு…!!

NEWSKADAI

சீட்டுக்கட்டு போல் சரிந்து விழுந்த 5 மாடி கட்டிடம்… இடிபாடுகளில் சிக்கிய 200 பேர் கதி என்ன???

MANIMARAN M

கொரோனாவை வீழ்த்த வந்த “Sputnik V”…! ரஷ்யாவுடன் கை கோர்க்குமா இந்தியா…???

MANIMARAN M

பிரசாந்த் பூஷன்: ஒரு ரூபாய் அபராத வழக்கின் ஒப்புதல் வாக்குமூலம்..!!

NEWSKADAI

ஐந்து நாளில் 3,076 கோடி…! பி.எம் கேர்ஸிடம் கணக்கு கேட்கும் ப.சிதம்பரம்..!!

THAVAMANI NATARAJAN