Newskadai.com
இந்தியா

கொரோனாவிலிருந்து மீண்டார் உள்துறை அமைச்சர் அமித் ஷா…. கொண்டாட்டத்தில் பாஜக தொண்டர்கள்…!!

Share this:

இந்தியாவில் தீவிரம் எடுத்து வரும் கொரோனா தொற்றுக்கு முன் களப்பணியாளர்களான மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்கள், தூய்மை பணியாளர்கள் மட்டுமல்லாது, நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய களம் இறங்கும் அரசியல் கட்சி தலைவர்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் ஆகியோரும் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வரிசையில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு ஆகஸ்ட் 2ம் தேதி கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

Amith shah

இதையடுத்து ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்த அமித் ஷா, ஆரம்ப கட்ட கொரோனா அறிகுறிகள் தென்பட்டதாகவும், அதையடுத்து மேற்கொண்ட பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். தற்போது வரை தனது உடல் நலம் நன்றாக இருப்பதாகவும், இருப்பினும் மருத்துவர்களின் அறிவுரையின் படி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக யாரெல்லாம் வந்து தன்னை சந்தித்தார்களோ அவர்கள் அனைவரும் தன்னைத் தானே தனிமைப்படுத்திக்கொள்ளும் படியும், கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் படியும் தெரிவித்திருந்தார்.

கடந்த 12 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த அமித் ஷாவிற்கு இன்று இரண்டாவது முறையாக மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அமித் ஷாவிற்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியாகியுள்ளது. இதன் மூலம் உடல் நலம் பூரண குணமடைந்த அமித் ஷா நல்லபடியாக வீடு திரும்ப உள்ளார். இருப்பினும் சில நாட்களுக்கு வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள அமித் ஷாவிற்கு மருத்துவர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அமித் ஷா, இன்று தனக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று நெகடிவ் என வந்துள்ளதாகவும், தனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.


Share this:

Related posts

இந்தியாவில் தலை தூக்கும் துப்பாக்கி கலாச்சாரம்… அரசு அதிகாரிகளை துப்பாக்கியை காட்டி மிரட்டிய முன்னாள் அமைச்சர்…!!

THAVAMANI NATARAJAN

இறுதிக்கட்ட பரிசோதனையில் கொரோனா தடுப்பு மருந்து… இந்தியாவிற்கு கிடைத்த சூப்பர் வாய்ப்பு…!!

NEWSKADAI

ரிசர்வ் வங்கியின் அடிமடியில் கைவைத்த மத்திய அரசு… வெளியானது அதிர்ச்சி தகவல்…!!

POONKUZHALI

கஞ்சா கிடைக்காத கடுப்பில் போதை ஆசாமி செய்த காரியம்… எக்ஸ்ரே ரிப்போர்ட்டில் மருத்துவருக்கு காத்திருத்த அதிர்ச்சி…!!

NEWSKADAI

அசத்தல் உடையில் அயோத்திக்கு புறப்பட்ட மோடி… இன்னும் சற்று நேரத்தில் அடிக்கல் நாட்டுகிறார்…!!

NEWSKADAI

மாணவர்களுக்கு இலவச ஆன்ட்ராய்டு போன்… அரசின் அதிரடி அறிவிப்பு….!!

MANIMARAN M