Newskadai.com
இந்தியா

மத்திய அமைச்சர் அமித் ஷா உடல் நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்…

Share this:

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு கடந்த ஆகஸ்ட் 2ம் தேதி கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று கொரோனாவிலிருந்து மீண்டு வந்தார். மீண்டும் உடல் நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் ஆகஸ்ட் 31 ஆம் தேதி குணமடைந்து எய்ம்ஸ் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பி தனது பணிகளை செய்து வந்தார்.

இந்நிலையில் நேற்றிரவு ஏற்பட்ட திடீர் உடல் நலக்குறைவால் மீண்டும் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அமித் ஷாவுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டிருப்பதாகவும் அதனால் மருத்துவர்களின் நேரடி கண்காணிப்பில் இருந்து வருகிறார் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.


Share this:

Related posts

தனி கட்சி முதல் ஜனாதிபதி வரை… பிரணாப் முகர்ஜியின் அரசியல் பயணம்…!!

MANIMARAN M

“இந்தியா கலாச்சாரத்தில் இருந்து இந்தியை நீக்கவே முடியாது”… மார்தட்டிக்கொள்ளும் அமித் ஷா, மோடி…!!

NEWSKADAI

கொரோனா தடுப்பு மருந்து விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் – பிரதமர் மோடி

MANIMARAN M

“அப்படி எல்லாம் மாற்ற முடியாது”…. பி.எம்.கேர்ஸ் நிதி வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!

MANIMARAN M

“சுப்ரீம் கோர்ட்ல பாத்துக்கலாம் ” நீட் தேர்வு விவகாரம்: மத்திய அரசுக்கு எதிராக ஒன்றிணைந்த 7 மாநில முதல்வர்கள்

MANIMARAN M