Newskadai.com
தமிழ்நாடு

ஒகேனக்கல் அருவிகளில் ஆர்ப்பரிக்கும் தண்ணீர் …சுற்றுலா பயணிகள் குதூகலம்…

Hogenakkal Falls
Share this:

கர்நாடக மாநிலம் மற்றும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த வாரங்களில் கனமழை பெய்து வருவதால், தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கல் பகுதிக்கு நீர்வரத்து அதிகப்பதும், குறைவதுமாக இருந்து வருகிறது. கடந்த இரன்டு நாட்களாக பெய்த மழையால் நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 9 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்தது. இதை தொடர்ந்து படிப்படியாக அதிகரித்த நீர்வரத்து, நேற்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. நீர்வரத்து அதிகரிப்பால் ஐந்தருவி, மெயின் அருவி, சினிபால்ஸ் போன்ற அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்தது.

இதையடுத்து ஒகேனக்கல்லில் நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து குவிந்தார்கள். சுற்றுளா பயணிகள் எண்ணெய் மசாஜ் செய்வதும் மெயின் அருவி மற்றும் காவிரி ஆற்றில் குளித்து மகிழ்ந்தனர். சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி பாதுகாப்பு உடை அணிந்து பரிசலில் செய்ய அனுமதித்தனர். ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதையும் படிக்க http://ஈரோட்டில் உள்ள ஒரு மளிகை கடையில் மின்சாரத்தால் சிறுவனுக்கு நேர்ந்த விபரீதம்….


Share this:

Related posts

மனைவியின் அடங்காத கள்ளக்காதலால் கணவன் செய்த வெறிச்செயல்… காஞ்சியில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்…!

THAVAMANI NATARAJAN

மாதந்தோறும் மின்கட்டண அளவீடு… முதலமைச்சருடன் ஆலோசித்து முடிவு… அமைச்சர் தங்கமணி…!!

MANIMARAN M

யூடியூப்பை பார்த்து இந்த இளைஞன் செய்த வேலையை பாருங்க.!!!

THAVAMANI NATARAJAN

பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டிக்கு ரூ.7.70 லட்சமா?… அதிர்ச்சியான மக்கள்… வீடியோ விட்டு சரண்டரான எம்.எல்.ஏ….!

MANIMARAN M

மத மாற்றத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள்… தொடக்க பள்ளியில் அரங்கேறிய அவலம்…!

THAVAMANI NATARAJAN

தஞ்சையில் பலகோடி மதிப்புள்ள அரியவகை ஓலைச்சுவடிகள் அபேஸ்… பொன்.மாணிக்கவேல் விசாரிக்க கோரிக்கை…

THAVAMANI NATARAJAN