Newskadai.com
உலகம்

நண்பர்களிடையே சமரசம்… கொண்டாட்டத்தில் துள்ளி குதிக்கும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்…!

Share this:

ஐக்கிய அரபு அமீரகத்தின் ஆயுதப்படை துணை உச்ச தளபதி ஷேக் மொஹமட் பின் சயீத் அல் நஹ்யான், அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வெளியிட்டுள்ள கூட்டு அறிக்கையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான உடன்படிக்கை மத்திய கிழக்கு நாடுகளில் அமைதியை ஏற்படுத்தும் வரலாற்று பூர்வ திருப்பம் என்று கூறியுள்ளனர்.

இது குறித்து அமெரிக்க அதிபர் தனது ட்விட்டர் பக்கத்தில், “இன்று மிகப்பெரிய முன்னேற்றம்! எங்கள் இரு பெரும் நண்பர்களான இஸ்ரேலுக்கும் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கும் இடையிலான வரலாற்று அமைதி ஒப்பந்தம்!”, என்று பதிவிட்டுள்ளார்.

மேலும், ஐக்கிய அரபு எமிரேட் மற்றும் இஸ்ரேலின் பிரதிநிதிகள் வரும் வாரங்களில் பல்வேறு பிரச்சினைகள் குறித்து இருதரப்பு ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவார்கள் என்று தலைவர்கள் அறிவித்தனர்.

உடன்படிக்கை குறித்து மேலும் இந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது,

  • இது தலைவர்களின் தைரியமான இராஜதந்திர பார்வையின் ஒரு சான்றாகும், இதனால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைதியை கொண்டுவரும்.

  • மத்திய கிழக்கின் மிகவும் ஆற்றல்மிக்க சமூகங்கள் மற்றும் மேம்பட்ட பொருளாதாரங்கள் இரண்டிற்கும் இடையே நேரடி உறவுகளையும், பொருளாதார வளர்ச்சியைத் தூண்டும்.

  • கோவிட் -19 க்கான சிகிச்சை மற்றும் இப்பெருந்தொற்றிற்கு எதிராக ஒன்றுச் சேர்ந்து செயல்பட்டு, மேம்பாடு தொடர்பான ஒத்துழைப்பை விரிவுபடுத்தி துரிதப்படுத்தும்.

  • இதனால் மத்திய பிராந்தியத்தில் வாழும் முஸ்லிம், யூத மற்றும் கிறிஸ்தவ உயிர்களைக் காப்பாற்ற உதவும்.

  • முதலீடு, சுற்றுலா, நேரடி விமானங்கள், பாதுகாப்பு, தொலைத்தொடர்பு, தொழில்நுட்பம், எரிசக்தி, சுகாதாரம், கலாச்சாரம், சுற்றுச்சூழல், போன்றவைகளில் முன்னேற்றம் காணும்.

  • இஸ்ரேலும் ஐக்கிய அரபு எமிரேட்ஸும் அமெரிக்காவுடன் இணைந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு இராஜதந்திர, வர்த்தக மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான முயற்சியாக அமையும்.

  • ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இஸ்ரேல் மற்றும் பிராந்தியத்தின் மக்களின் சிறந்த வாழ்க்கைக்கு இன்றைய ஒப்பந்தம் வழிவகுக்கும்.

  • ஜெருசலேமின் அல் அக்ஸா மசூதி மற்றும் அங்குள்ள மற்ற புனிதப் பகுதிகளுக்கும் அனைத்து முஸ்லீம்களும் வந்து அமைதியான முறையில் வழிபடுவதற்கு இலகுவாக்கும். என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Share this:

Related posts

ஆத்தாடி எவ்வளவு பெரிசு… இப்படியொரு ராட்சத வவ்வால்களை பார்த்திருக்கமாட்டீங்க…!

NEWSKADAI

மெகா ஊழல்…. முன்னாள் பிரதமருக்கு 12 ஆண்டுகள் சிறை…!!

NEWSKADAI

அதிர்ச்சி…! காற்றில் பரவும் புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு

AFRIN

கதறி துடித்த இந்துக்கள்… உடனடி உத்தரவு போட்ட பக்ரைன் அரசு… மெய் சிலிர்க்க வைக்கும் உண்மை!!!

NEWSKADAI

ட்ரம்பின் ஆட்சிக்கு வேட்டு வைக்கும் கொரோனா… இந்தியா கொடுத்த மலேரியா மாத்திரையால் சிக்கல்…!!

NEWSKADAI

மக்களே உஷார்: கொரோனாவின் ஆட்டம் இனி கொடூரமாக இருக்கும்… உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை…!

NEWSKADAI