Newskadai.com
உலகம்

இந்தியர்களுக்கு இனி வேலை இல்லை… அதிரடி உத்தரவு போட்ட அதிபர் ட்ரம்ப்…!!

Share this:

இந்திய, சீனா ஆகிய நாடுகளிலிருந்து ஆயிரக்கணக்கான தொழில்நுட்ப ஊழியர்கள் அமெரிக்காவில் ஹெச் 1 பி விசாவில் பணியாற்றிவருகின்றனர். கடந்த ஜூன் மாதம் அமெரிக்காவில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஹெச் 1 பி விசாவை இந்த ஆண்டு இறுதி வரை வழங்க தடை விதித்தது அமெரிக்க அரசு. இந்நிலையில் அமெரிக்காவில் அரசு ஒப்பந்தப் பணிகளில் அமெரிக்கர்களை மட்டுமே வேலைக்கு அமர்த்த வேண்டும், எச்1பி விசா வைத்துள்ளவர்களை வேலைக்கு எடுக்கக் கூடாது என அதிபர் டிரம்ப் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் படிக்க:http://டிரம்பை எச்சரித்த ஒபாமா… அனல் பறக்கும் அமெரிக்க அரசியல்…!!

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், அமெரிக்க தொழிலாளர்களுக்கு மாற்றாக இனி வேறு எந்த நாட்டினரும் இங்கு பணியாற்ற முடியாது. அரசு ஒப்பந்த பணிகளுக்கு அமெரிக்க குடிமக்களை மட்டுமே தேர்வு செய்ய வேண்டும். அமெரிக்கர்களுக்கு மட்டுமே வேலைகளை வழங்க வேண்டும். எச் 1 பி விசாவில் இருக்கும் வெளி நாட்டு தொழிலாளர்களை இந்த பணியில் அமர்த்தக் கூடாது என்று கூறினார்.

மேலும் படிக்க:http://கண் தெரியாத மாணவிக்கு கைகொடுத்த தொழில்நுட்பம்… தமிழக மாணவியின் அசாத்திய சாதனை…!!

மேலும், அவர் கூறுகையில், வெளிநாட்டினரை வேலைக்கு எடுக்கும் அமெரிக்க அரசு ஒப்பந்த நிறுவனமான டென்னிஸி வேலி ஆணையம் அமெரிக்கர்களுக்கு மட்டுமே வேலை வழங்க வேண்டும். குறைந்த ஊதியத்தில் இந்த ஆணையம் வெளிநாட்டு ஊழியர்களை பணியமர்த்தியதால் அமெரிக்காவின் 200-க்கும் அதிகமான திறமை மிகுந்த ஐ.டி. ஊழியர்கள் வேலையிழந்துள்ளனர்.

எனவே இந்த ஆணையம் அமெரிக்கர்களுக்கு வேலை வழங்கவேண்டும், இல்லையெனில் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று இந்த ஆணையத்திற்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளார். அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் இந்த அதிரடி உத்தரவு இந்திய தொழில் நுட்ப ஊழியர்களையே பெரிதும் பாதிக்கும்.


Share this:

Related posts

60% வாக்குகளுடன் அமோக வெற்றி… இலங்கை தேர்தலில் ஜெயித்த ராஜபக்சே…!!

MANIMARAN M

டெம்பிள் சிட்டி குமாருக்கு நித்தியானந்தா கொடுத்த வாக்குறுதி… மாஸ் காட்டும் மதுரைவாசி…!!

AMARA

கட்டுக்கடங்காமல் பற்றி எரியும் தீ… UAE தீ விபத்தின் பயங்கர வீடியோ…!!

MANIMARAN M

நண்பேண்டா – கோடிகளைக் கொட்டிக் கொடுத்த நட்பு.

NEWSKADAI

குட் நியூஸ்: கொரோனாவை எதிர்க்க ஆயுதம் கிடைச்சாச்சு… அசுர வேகத்தில் தடுப்பூசி தயாரிக்கும் பணி தீவிரம்…!!

THAVAMANI NATARAJAN

இந்த ஆண்டு முடியும் வரை யாரும் எங்கள் நாட்டிற்குள் வர வேண்டாம் : மலேசிய அரசு அதிரடி!!

MANIMARAN M