Newskadai.com
தமிழ்நாடு

தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி நடந்தே தீரும்… அரசுக்கு சவால் விடும் இந்து முன்னணி…!!

Share this:

பொதுமக்கள் நலன் கருதி கொரோனா நோய் பரவலை தடுக்கும் நடவடிக்கையாக பொது இடங்களில் மக்கள் கூடுவது தடை செய்யப்பட்டு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளது. இதனால் விநாயகர் சதுர்த்தி அன்று சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்வதை அனுமதிக்க இயலாது. விநாயகர் சதுர்த்தி பண்டிகையை மக்கள் இவ்வாண்டு அவரவர் வீடுகளிலேயே கொண்டாட வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது. இந்நிலையில் இந்து முன்னணியின் தமிழ் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஆன்மீக நம்பிக்கை தான் நோய் எதிர்ப்பு சக்தியையும், நோயை எதிர்த்துப் போராடும் நம்பிக்கையை கொடுக்கும். அதற்காகவே இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை எளிமையாகவும் அதே சமயம் கட்டுப்பாட்டுடனும் நடத்திட ஏற்பாடுகள் செய்து வருகிறோம். தற்போது தமிழக அரசு இந்துக்களுக்கு அநீதி இழைக்கும் வகையில் இந்து விரோத நிலைப்பாட்டை எடுத்துள்ளது. விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு தடை விதித்துள்ளது.

கடந்த 36 ஆண்டுகளாக விநாயகர் சதுர்த்தி திருவிழாவை இந்துக்கள் ஒற்றுமையுடன் எழுச்சி விழாவாக கொண்டாடி வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் அரசு விதிக்கும் கட்டுப்பாடுகளை மதித்து விழாவை நடத்தி வந்துள்ளோம். கொரோனா தொற்றுநோய் காரணமாக தக்க முன்னெச்சரிக்கை பாதுகாப்புடன் சுகாதாரத்துறை விதிக்கும் கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து இவ்வாண்டு விநாயகர் சதுர்த்தி விழா ஒன்றரை லட்சம் இடங்களில் திட்டமிட்டபடி நடக்கும் என்பதை இந்து முன்னணி உறுதியாக தெரிவித்துக் கொள்கிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share this:

Related posts

நாகையிலும் விவசாயிகளின் வயிற்றில் அடித்த போலி விவசாயிகள்…

MANIMARAN M

நாளை மறுநாள் மேட்டூர் அணை திறப்பு… முதலமைச்சர் அதிரடி உத்தரவு…!!

THAVAMANI NATARAJAN

அண்ணா பல்கலைக்கழக பெயரை மாற்றுவதற்கு எதிர்ப்பு : நாளை முதல் கருப்பு பேஜ் போராட்டம்..!!!

THAVAMANI NATARAJAN

மனநலம் பாதிக்கப்பட்டவர்களும் மனிதர்களே… தமிழக அரசுக்கு அதிரடி உத்தரவு போட்ட உயர் நீதிமன்றம்…!!

AMARA

அடித்து சொல்லும் அண்ணா யூனிவர்சிட்டி… அரசின் ஊசல் ஆட்டத்தால் தவிக்கும் மாணவர்கள்…!!

THAVAMANI NATARAJAN

பாஜகவில் சேர வந்த ரவுடி… போலீசுக்கு பயந்து தப்பியோட்டம்…

MANIMARAN M