Newskadai.com
தமிழ்நாடு

இந்து முன்னணி நிறுவனர் ராமகோபாலன் காலமானார்… துக்கத்தில் தொண்டர்கள்…!

Share this:

இந்து முன்னணியின் நிறுவன அமைப்பாளரான ராமகோபாலன் உடல் நலக்குறைவால் இன்று காலமானார். கடந்த 26ம் தேதி மூச்சுத்திணறல்ஏற்பட்டதை அடுத்து போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மேலும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதன் பின்னர் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியான. கொரோனா தொற்றுக்காக சிகிச்சை அளிக்கப்பட்டு, அதிலிருந்து அவர் மீண்டு வந்ததாக கூறப்பட்ட நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வயது மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக அவர் உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மரணமடைந்த ராம கோபாலனுக்கு வயது 95. இந்து அமைப்பின் மூத்த தலைவர்களில் மிகவும் முக்கியமானவரான ராம கோபாலனின் மறைவு பாஜக மற்றும் பிற இந்து அமைப்புகளைச் சேர்ந்த தொண்டர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


Share this:

Related posts

ஜீவா பட தயாரிப்பாளர்… மாணவர்களுக்காக போர்வெல் அமைத்துக் கொடுத்து அசத்தல்..!!

MANIMARAN M

வேலையில்லனா என்ன பாஸ்…!! பட்டதாரிகளுக்கு முன்னுதாரணமாக மாறிய அசத்தல் இளைஞர்கள்..!!

MANIMARAN M

7 பேர் கொண்ட குழு நியமணம் : புதிய கல்விக் கொள்கை குறித்து ஆராய தமிழக அரசு அதிரடி…

MANIMARAN M

தமிழக ராணுவ வீரர் திருமூர்த்தி உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்…!!

AMARA

தொடரும் சதுரங்க வேட்டை : நான்கு மடங்கு தருவதாக ஆசையை தூண்டிவிட்டு நூதன மோசடி…!!

MANIMARAN M

பலி எண்ணிக்கை 10 ஆயிரத்தை தொட்ட கொரோனா… உங்க மாவட்டத்தில் எவ்வளவு…!?

NEWSKADAI