Newskadai.com
அரசியல்

மக்களுக்கே ‘மணல்’ இல்லை என்றால் நீங்க ஏன் ‘குவாரி’ நடத்தனும்?… அரசை கேள்வி கேட்ட ஐகோர்ட்…!

smuggling sand
Share this:

மணல் விற்பனையை தற்போது அரசே மேற்கொண்டு வருகிறது. இணையதளத்தின் மூலம் முன்பதிவு செய்பவர்களுக்கு குறைந்த விலையில் மணல் விற்கப்படும் என அரசு அறிவித்திருந்தது. பொதுமக்கள் வெள்ளிக்கிழமை மட்டும் முன்பதிவு செய்யலாம் லாரி உரிமையாளர்கள் எப்போது வேண்டுமானாலும் முன்பதிவு செய்யலாம் என்ற நடைமுறை அரசால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால் உண்மையில் பொதுமக்களுக்கு அரசின் மணல் கிடைப்பதில்லை. அரசின் இணைய தளத்தில் மக்கள் நுழைவு திறப்பதே இல்லை. அப்படியே திறந்தாலும் முன்பதிவு முடிந்து விட்டதாகவே காட்டுகிறது.

ஆனால் மணல் விற்பனை செய்பவர்களுக்கு மட்டும் மணல் எளிதில் கிடைக்கிறது. அரசிடமிருந்து 6 ஆயிரத்து 500 ரூபாய்க்கு வாங்கும் மணலை அவர்கள் ரூபாய் 40 ஆயிரத்துக்கு விற்பனை செய்து வருகின்றனர். இதனை எதிர்த்து பட்டுக்கோட்டையைச் சேர்ந்த தங்கவேல் என்பவர் உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் என். கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் “தற்போது மணல் இருப்பு போதுமானதாக இல்லை. ஆன்லைனில் முன்பதிவு செய்வோரின் இருப்பிடத்தைப் பொறுத்து மணல் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. நேரடியாக வீடுகளுக்கே சென்று மணல் சப்ளை செய்ய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், “சாதாரண மக்களுக்கு சரியான விலையில் மணல் கிடைப்பதில்லை. ஆன்லைனில் அரசால் விற்பனை செய்யப்படும் மணல் இடைத்தரகர்களால் கூடுதல் விலைக்கு விற்கப்படுகிறது. சாதாரண மக்களுக்கு எளிதில் மணல் கிடைக்காத நிலையில் அரசு ஏன் மணல் குவாரியை நடத்த வேண்டும்? மணல் குவாரிகளை மூடி விடலாமே?. இது தொடர்பாக தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள் இவ்வழக்கின் மறுவிசாரணையை அக்டோபர் 28-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.


Share this:

Related posts

“சீமானை சும்மா விடமாட்டேன்”… தெருக்கோடியில் உட்கார்ந்து சபதம் போட்ட விஜயலட்சுமி…!!

AMARA

திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு கொரோனா தொற்று… சோகத்தில் உடன்பிறப்புகள்…!

AMARA

கொரோனாவை வென்றார் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்… 80 வயதிலும் மன உறுதிக்கு கிடைத்த வெற்றி…!!

AMARA

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு: செப்.21ல் தோழமை கட்சிகளுடன் திமுக ஆலோசனை…!!

MANIMARAN M

குஷ்பு பாஜகவில் இணைய அவர் தான் காரணம்…. கடுப்பில் கொந்தளித்த காங்கிரஸ் மூத்த தலைவர்…!

NEWSKADAI

பாஜகவுக்கு அடுத்த ஆப்பு… கூட்டணியில் இருந்து விலகியது மற்றொரு கட்சி…!!

MANIMARAN M