கொரோனா பெருந்தொற்று ஊரடங்கு காரணமாக, வாடகை செலுத்த முடியாத நிலையில் இருந்த கடைக்காரர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடுத்திருந்தார். கடையை பயன்படுத்தாமல் இருப்பதால், வாடகை செலுத்த முடியாது என்று அவர் தரப்பில் வாதம் முன் வைக்கப்பட்டது.
ஆனால், கடையை உரிமையாளரிடம் ஒப்படைக்காத வரை, வாடகையை செலுத்திதான் ஆக வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது என்று சென்னையில் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் நடந்த கருத்தரங்கு ஒன்றில் பேசிய டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி பிரதிபா எம்.சிங் தெரிவித்தார்.
மேலும் கொரோனா பேரிடர் காலம் பெரும் சாவாலாகவே உள்ளது. அடுத்த ஐந்து வருடங்களுக்கு வாடகை ஒப்பந்தங்கள் தொடர்பான வழக்குகள்தான் நீதிமன்றங்களுக்கு அதிகமாக வரப்போகிறது. எனவே, உரிமையாளர் மற்றும் வாடகைதாரர் இருவரும் பேச்சுவார்த்தைகள் மூலம் பிரச்சினைகளை பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்றும், அவர் தெரிவித்தார்