Newskadai.com
தமிழ்நாடு

மேட்டூர் அணையின் “செஞ்சுரி தடுப்பு”… சட்டென குறைக்கப்பட்ட நீர்வரத்து…!!

Share this:

தமிழகம் மற்றும் கர்நாடகாவில் கடந்த சில வாரங்களாகவே தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது.  சில இடங்களில் மழையின் தாக்கத்தால் விவசாய நிலங்கள் சேதம், நிலச்சரி, பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுதல் போன்ற சம்பவம் நடந்து வருகிறது . மேலும்  சில மாவட்டங்களின் அணைகள் நிரம்பியும் வருகிறது. இதனை தொடர்ந்து மேட்டூர் அணையின் நீர் மட்டமும் அதிகரித்து வருகிறது.
கடந்த இரண்டு நாட்களில் மேட்டூர் அணையின் தண்ணீர் இருப்பு நிலை 43.06 டிஎம்சி-யாகவும் அணையின் நீர்மட்டமானது ஒரே நாளில் 11.8 அடியாகவும் அதிகரித்திருந்தது. மேலும் அணையின் நீர்மட்டம் 86.91 அடியாக உயர்ந்திருந்தது. மேலும் காவிரியிலிருந்து டெல்டா பாசனத்துக்காக வினாடிக்கு 1000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டிருந்த நிலையில் அணையின் மொத்த கொள்ளவு 120 அடியை வரும் வாரங்களில் எட்டும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தற்போதயை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 97.27 அடியாக உயர்ந்துள்ளது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 80,000 கன அடியிலிருந்து 60,000 கன அடியாக குறைந்துள்ளது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை கடந்து விடும் என எண்ணிய தமிழக விவசாயிகள் ஏமாற்றமடைத்துள்ளனர். தற்போது தண்ணீரின் இருப்பு நிலை 61.36 டிஎம்சி ஆக அதிகரித்துள்ளது. மேலும் பாசனத்துக்கான நீர் 10,000 கனஅடியாக வெறியேற்றப்படுகிறது. தமிழக எல்லை பிலிகண்டுலுவில் காவிரி நீர் வரத்து 40,000 கன அடியிலிருந்து 16,000 கன அடியாக குறைந்துள்ளது.
அணையின் நீர்மட்டம் உயர்ந்துவருவதாலும் பாசனத்திற்கான தண்ணீர் அதிகளவில் திறந்து விடுவதாலும், காவிரி கரையோர வசிக்கும் மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மிகவும் தாழ்வான பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

Share this:

Related posts

“8 முறை கோரிக்கை வைத்தும் எதுவும் கண்டுக்கல”…. போராட்டத்தில் குதித்த அரசின் முக்கிய துறை…!

THAVAMANI NATARAJAN

நாளை புரட்டாசி அமாவாசை… மேச்சேரி பத்ரகாளியம்மன் கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை…!!

THAVAMANI NATARAJAN

தமிழகத்தில் இ-பாஸ் கட்டாயம்… முதலமைச்சர் பழனிசாமியின் அதிரடி அறிவிப்பு…!!

NEWSKADAI

சேலத்தை குலை நடுங்க வைக்கும் ’கொரோனா’… பலி எண்ணிக்கையை பார்த்து பதறும் மக்கள்…!!

NEWSKADAI

கொத்து கொத்தாய் செத்து மடியும் சேலம் மக்கள்… இன்று ஒரே நாளில் 10 பேர் பலி…!!

NEWSKADAI

விவசாயிகளின் வயிற்றில் அடித்த போலி விவசாயிகள் : வெளிச்சத்திற்கு வந்த 110 கோடி ரூபாய் முறைகேடுகள்…

MANIMARAN M