Newskadai.com
தமிழ்நாடு

செஞ்சுரி அடிக்க போகுது மேட்டூர் அணை… நீர்மட்டம் கிடு கிடு உயர்வு

Share this:

தமிழகம் மற்றும் கர்நாடகாவில் கடந்த சில வாரங்களாகவே தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது.  சில இடங்களில் மழையின் தாக்கத்தால் விவசாய  நிலங்கள் சேதம், நிலச்சரி, பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுதல் போன்ற சம்பவம் நடந்து வருகிறது . மேலும்  சில மாவட்டங்களின் அணைகள்  நிரம்பியும் வருகிறது. இதனை தொடர்ந்து மேட்டூர் அணையின் நீர் மட்டமும் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் 40,000 கன அடிக்கு மேல் காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் தமிழகத்துக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் இன்று காலை நிலவரப்படி தமிழகத்தின் எல்லை பகுதியான பிலிக்குண்டுலுக்கு 41 ஆயிரத்து 600 கன அடியாக நீர்வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கான நீர்வரத்தும் இன்று காலை நிலவரப்படி 34,366 கன அடியாக அதிகரித்துள்ளது.
இதனால் அணையின் நீர்மட்டம் 99 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 63.6 டி.எம்.சி யாகவும் உள்ளது. எனவே அணையில் இருந்து பாசனத்துக்காக ஆற்றில் 16,500 கன அடி நீரும், கிழக்கு மேற்கு கால்வாய்களில் 500 கன அடி நீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 1.16 அடியாக உயர்ந்துள்ளதை அடுத்து மேட்டூர் அணையின் நீர்மட்டம் நாளை மதியத்திற்குள் 100 அடியை எட்டி வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Share this:

Related posts

மேட்டூர் அணையின் “செஞ்சுரி தடுப்பு”… சட்டென குறைக்கப்பட்ட நீர்வரத்து…!!

THAVAMANI NATARAJAN

பிரபல ரவுடி என்கவுண்டர்… பரபரப்பில் சென்னை…

MANIMARAN M

தாரமங்கலத்தில் வரும் 28, 29-ல் முழு கடையடைப்பு… கொரோனாவால் வணிகர்கள் எடுத்த அதிரடி முடிவு…!!

AMARA

மத மோதலை தூண்டிய பாஜக… எஸ்.பி. வருண்குமார் மாற்றத்திற்கு எதிராக குவியும் கண்டனங்கள்…!!

NEWSKADAI

இது மத்திய அரசின் சூழ்ச்சி… சிபிஎஸ்இ +2 தேர்வு ரத்து குறித்து பகீர் கிளப்பும் வைகோ…!

AMARA

மனநலம் பாதிக்கப்பட்டவர்களும் மனிதர்களே… தமிழக அரசுக்கு அதிரடி உத்தரவு போட்ட உயர் நீதிமன்றம்…!!

AMARA