Newskadai.com
தமிழ்நாடு

சேலத்தை அடித்து நொறுக்கிய பேய் மழை… வீடுகளை சூழ்ந்த வெள்ள நீரால் மக்கள் அவதி…!!

Salem Rain
Share this:

தமிழகத்தில் பெருவாரியான மாவட்டங்களில் வார கணக்கில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் சேலத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் ஏரிகள், குளங்கள் ஆகியவற்றிக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதனால் விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளனர். இதனை தொடர்ந்து சேலம் மாவட்டத்தில் நேற்று ஒரு சில இடங்களில் கனத்த மழைபெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

சேலம் மாவட்டம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாகவே சேலத்தில் மிதமான மழை பெய்து வருகிறது. நேற்று மதியத்தில் இருந்தே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் சுமார் 3 மணி அளவில் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்யதது. சேலம், ஓமலூர், காடையாம்பட்டி, ஆத்தூர்,மேட்டூர், உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. ஒரு சில இடங்களில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கனமழை நீடித்தது.

இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடத்தொடங்கியது. சாக்கடை நீரில் கலந்து மழை நீரானது வீடுகளுக்குள் புகுந்ததால் துர்நாற்றம் வீசதொடங்கியது. இதனால் மக்கள் பெரும் அவசத்தை படுகிறார்கள். சாக்கடை கால்வாயை அகலப்படுத்தி ஆழப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுகின்றனர் பழைய மற்றும் புதிய பஸ் நிலையம், சூரமங்கலம், பெரமனூர், அழகாபுரம், அஸ்தம்பட்டி, மணக்காடு, கிச்சிப்பாளையம், அன்னதானபட்டி, செவ்வாய்பேட்டை, கன்னங்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்ததால், தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது.

சேலம் தமிழ்ச்சங்க சாலை,  நாராயன பிள்ளை வீதி ஆகிய இடங்களில் தண்ணீர் அதிகமாக தேங்கியது. சேலம் சிவதாபுரம் பகுதியில் உள்ள சேலத்தாம்பட்டி ஏரி நிரம்பி தண்ணீர் வழிந்து சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். அதே போன்று சூரமங்கலம் பகுதியில் பலரது வீடுகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளதால் அப்பகுதி மக்கள் பாத்திரங்கள், வாளிகளை கொண்டு தண்ணீரை வெளியேற்றினர். சேலம் சத்திரம் பகுதியில் தண்ணீர் சூழ்ந்ததால் அம்மா உணவகம் மூடப்பட்டது. இதனால் செவ்வாப்பேட்டை, சத்திரம் பகுதியில் மூட்டை தூக்கும் தொழிலாளர்கள் அங்கு வந்து சாப்பிட முடியாமல் தவித்துள்ளனர்.

சத்திரம் பகுதியில் போதிய அளவுக்கு சாக்கடை கழிவுநீர் செல்ல வசதி இல்லாததால் இது போன்ற அவல நிலை அடிக்கடி ஏற்படுவதாகவும் அப்பகுதி பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர். மேலும் ஆத்தூர் அருகே உள்ள பைத்தூர் ஊராட்சி 1-வது வார்டு முருவம் மலை கிராமத்தில் பெய்த பலத்த மழையின் காரணமாக மலையில் இருந்து ராட்சத பாறை உருண்டு சாலையில் விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது பற்றி தகவல் அறிந்ததும் மாவட்ட வன அலுவலர் முருகன் உத்தரவின் பேரில் வனத்துறையினர் பொக்லைன் எந்திரம் மூலம் ராட்சத பாறையை அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர். சேதங்கள் இருப்பினும் பாதிப்புகள் அதிக அளவில் இல்லை என்பது சிறிய மகிழ்ச்சி அளிக்கிறது.


Share this:

Related posts

கிருஷ்ணகிரி அரசியல் பிரமுகர்களை தொடர்ந்து தாக்கும் கொரோனா

THAVAMANI NATARAJAN

கொரோனா பீதி: கோவையை விட்டு கூட்டம், கூட்டமாக வெளியேறும் மக்கள்… திணறும் போலீசார்…!

NEWSKADAI

கைலாசாவிற்கு வர இந்த மூணு ஊர்காரங்களுக்கு முன்னுரிமை… நித்தியின் தமிழ்நாட்டு பாசம்…!!

AMARA

தமிழகத்தில் அதிர்ச்சி… ஒரே நாளில் கொரோனாவுக்கு 119 பேர் பலி…!!

AMARA

அம்மாடியோவ்… இருமடங்காக அதிகரிக்கப்பட்டது மேட்டூர் அணை நீர் திறப்பு…!!

THAVAMANI NATARAJAN

கோவை விவசாயியின் சாதனை: 2 ஏக்கரில் 250 வகை காய்கறிகள் பயிட்டு அசத்தல்…!

NEWSKADAI