Newskadai.com
லைஃப் ஸ்டைல்

8 மாவட்டங்களை தட்டித்தூக்கப் போகும் கனமழை… மீனவர்களுக்கும் எச்சரிக்கை…!!

Rain
Share this:

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே மிதமான மற்றும் கனமழை பெய்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக ஒரு சில மாவட்டங்களில் மிதமான மற்றும் கனமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் லேசான மழையும், ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சேலம், நாமக்கல், நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழையும் பெய்யக்கூடும் எனவும் அடுத்த 48 மணி நேரத்தில் வட உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியசும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 26 டிகிரி செல்சியசும் ஒட்டி பதிவாகக்கூடும்.

Rain

மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது சென்னை வானிலை மையம்…
செப்டம்பர் 9 முதல் 11 வரை குமரிக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று 40-50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் செப்டம்பர் 9ம் தேதி முதல் 13ம் தேதி வரை தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று 45-55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்றும் மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Share this:

Related posts

இன்னைக்கு எல்லா ராசிக்காரங்களுக்குமே சூப்பர்…. கொஞ்சம் இதை மட்டும் சரி பண்ணிக்கோங்க…!!

THAVAMANI NATARAJAN

குடி வெறி: தம்புல்ஸை மனைவி தலைமேல் போட்ட குடிகார கணவன்…!!

MANIMARAN M

சங்கடங்களை தீர்க்கும் சங்கடஹர சதுர்த்தி….!!

THAVAMANI NATARAJAN

அடடா… இன்னைக்கு எல்லா ராசிக்காரங்களுக்கும் அமோகமா இருக்கே…!!.

THAVAMANI NATARAJAN

10ம் வகுப்பு படித்திருந்தாலே போதும்… அஞ்சல் துறையில் வேலை…!!

THAVAMANI NATARAJAN

இன்னைக்கு இந்த ராசிக்காரங்களுக்கு எல்லாம் செம்ம தூளுங்க… ராசி பலன் சொல்லுறத கேளுங்க…!!

NEWSKADAI