Newskadai.com
இந்தியா

மத்திய பிரதேசத்தில் தலை, பெங்களூருவில் உடல்… கொலையா? தற்கொலையா? குழம்பும் போலீசார்..!!

Death
Share this:

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ரயில் தண்டவாளத்தில் தலையின்றி உடல் பாகம் மட்டும் சிதறி கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் பெத்துல் பகுதியில் கடந்த 3 ம் தேதி ரயில் தண்டவாளத்தில் விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். தண்டவாளத்தில் உடலின் பாகம் மட்டும் கிடந்துள்ளது. அந்த நபரின் தலை மட்டும் கிடைக்கவில்லை. எனவே காணாமல் போன தலை குறித்து பெத்துல் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

Only the headless body partமேலும் படிக்க: http://ரேஷன் கடைகளுக்கு இன்று விடுமுறை – தமிழக அரசு அறிவிப்பு…

இந்த நிலையில் கடந்த 4 ம் தேதி டெல்லியில் இருந்து பெங்களூர் சென்ற ராஜதானி விரைவு ரயில் எஞ்சினில் தலை சிக்கியிருப்பதாக ரயில்வே ஊழியர்கள் காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளனர். தலை மட்டும் எங்கே போயிருக்கும் என தலையை பியித்துக்கொண்ட காவலருக்கு ஒரு வழியாக விடை கிடைத்தது. மத்திய பிரதேசத்தில் கிடைத்த உடலின் பாகங்களும், பெங்களுரில் கிடைத்த தலையும் உயிரிழந்த நபருடையதுதான் என கண்டுபிடிக்கப்ட்டது. மேலும் உயிரிழந்தவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலையா? என்ற கண்ணோட்டத்தில் விசாரணை செய்து வருகிறார்கள்.


Share this:

Related posts

பிரசாந்த் பூஷன்: ஒரு ரூபாய் அபராத வழக்கின் ஒப்புதல் வாக்குமூலம்..!!

NEWSKADAI

நாய்கள் பராமரிக்க ஆட்கள்தேவை கல்வித்தகுதி : பி.ஏ. பிஎஸ்சி. பிடெக்

NEWSKADAI

ஒரு ரூபாய் நோட்டு வைத்திருந்தால் நீங்களும் லட்சாதிபதிதான்..!!

THAVAMANI NATARAJAN

“வெட்கங்கெட்ட ஆட்சி”… முற்றும் சிவசேனா – பாஜக மோதல்…!!

NEWSKADAI

“உங்க மேக் இன் இந்தியா, தற்சார்பு பேச்செல்லாம் பித்தலாட்டம்”… மத்திய அரசை வெளுத்து வாங்கிய டெல்லி உயர் நீதிமன்றம்…!!

POONKUZHALI

கொரோனா பீதி: கைவிடப்பட்ட முதியவர் சடலம்… கண்டுகொள்ளாத சுகாதாரத்துறை… இறுதியில் அரங்கேறிய அவலம்… வீடியோ…!!

MANIMARAN M