Newskadai.com
உலகம்

நண்பேண்டா – கோடிகளைக் கொட்டிக் கொடுத்த நட்பு.

Share this:

28 ஆண்டுகளுக்கு பிறகு ரூ.164 கோடியை சமமாக பிரித்துக் கொண்ட நண்பர்கள். அமெரிக்காவில் நடந்த நெகிழ்ச்சியான சம்பவம்.

“முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து

அகநக நட்பது நட்பு”

என்று இரண்டாயிரம் ஆண்டுகள் முன்பு கூறிய குறளுக்கு இச்சம்பவம் உதாரணமாக உள்ளது.டாம் குக் மற்றும் ஜோசப் பீனி இருவரும் அமெரிக்காவின் விஸ்கான்சின் நகரில் வசித்து வரும் நீண்ட கால நெருங்கிய நண்பர்கள்.

கடந்த 1992 ஆம் ஆண்டு நண்பர்கள் இருவரும் தங்கள் இருவரில் யார் பவர்பால் ஜாக்பாட்டை வென்றாலும் அதை சரிபாதியாக பிரித்துக்கொள்ள வேண்டும் என்று ஒரு ஒப்பந்தம் செய்துக் கொண்டுள்ளனர். சென்ற மாதம் டாம் குக் பவர்பால் ஜாக்பாட் லாட்டரி டிக்கெட் ஒன்றை வாங்கியுள்ளார். இந்த ஜாக்பாட் லாட்டரியில் டாம் குக்குக்கு ரூ.164 கோடி பரிசு விழுந்தது.

உடனடியாக இந்தத் தகவலை ஜோசப் பீனிக்கு தெரியப்படுத்தியுள்ளார் டாம் குக். மேலும், 28 ஆண்டுகள் முன்பு 1992-ல் நாம் போட்ட ஒப்பந்தத்தின்படி இருவரும் இந்தப் பணத்தை பிரித்துக்கொள்ளலாம் என கூறியுள்ளார் டாம் குக்.பணி ஓய்வுப் பெற்று மீன்பிடி தொழில் செய்து வரும் ஜோசப் பீனி இதனை கேட்டு நம்ப முடியாமல் பிரமித்துள்ளார்.

இந்த பணத்தை வைத்து மிகப்பெரிய திட்டமிடல் எல்லாம் ஒன்றுமில்லை. தற்போது மகிழ்ச்சியாக ஊர் சுற்றுலாம். பணி ஓய்வுக்குப் பிறகு எஞ்சி இருக்கிற வாழ்க்கையை நிம்மதியாக கழிக்கலாம் என டாம் குக் கூறியுள்ளார்.


Share this:

Related posts

“ட்ரம்பின் அப்பனுக்கே அது தெரியாது”… அமெரிக்க அதிபரின் முகத்திரையை கிழித்த அண்ணன் மகள்…!

NEWSKADAI

மக்களால் நான்… மக்களுக்காக நான்… பதவி விலகிய பிரதமர்…

MANIMARAN M

வடகொரிய அதிபரை வச்சி செஞ்ச கொரோனா… முதல் நபருக்கு உறுதியானது தொற்று…!

NEWSKADAI

டெம்பிள் சிட்டி குமாருக்கு நித்தியானந்தா கொடுத்த வாக்குறுதி… மாஸ் காட்டும் மதுரைவாசி…!!

AMARA

அட்ரா சக்க : அமெரிக்க தேர்தல் களத்தில் இந்திய வம்சாவளி பெண்… உருவாக போகும் புது வரலாறு…!!

MANIMARAN M

லெபனான் தலைநகரில் பயங்கர குண்டு வெடிப்பு… ரத்தத்தை உறைய வைக்கும் அதிர்ச்சி வீடியோ…!!

NEWSKADAI