Newskadai.com
தமிழ்நாடு

ஆன்லைனில் கொரோனா அறிவிப்பாணைகள்… தமிழக அரசுக்கு ஐகோர்ட் பிறப்பித்த ஆணை…!

Coronavirus
Share this:

கொரோனா தொடர்பான தமிழக அரசின் அனைத்து அரசாணைகள், அறிவிப்பாணைகளை அரசு இணையதளங்களிலும், ஸ்டாப் கொரோனா இணையதளத்திலும் பதிவேற்றம் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருச்செந்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் தாக்கல் செய்த மனுவில், தமிழக அரசின் அரசாணைகள், அறிவிப்பாணைகள், பத்திரிகை செய்திக் குறிப்புகளை வெளியிடுவதற்காக தமிழக அரசு இணையதளம் உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார். கொரோனா தொடர்பான அனைத்து அறிவிப்புகளையும், புள்ளிவிவரங்களையும் வெளியிட ஸ்டாப்கொரோனா என்ற இணையதளம் பயன்பாட்டில் உள்ளதாகவும், அதில் அனைத்து அரசாணைகளும் வெளியிடப்படுவதில்லை என குற்றம் சாட்டியுள்ளார்.

madras high court

2021ம் ஆண்டு துவங்கியது முதல் மே 12ம் தேதி வரை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை மூலம் 14 அரசாணைகள் பிறப்பிக்கப்பட்ட போதும், இதுவரை ஐந்து அரசாணைகள் மட்டுமே இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த ஆண்டு டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதியளித்த அரசாணை இதுவரை இணையதளத்தில் வெளியிடப்படவில்லை என்றும், கொரோனா தொடர்பான அறிவிப்புகள் மட்டுமல்லாமல் பிற அறிவிப்புகள், அரசாணைகளும் இணையதளத்தில் பதிவேற்தம் செய்யப்படுவதில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

அதனால் கொரோனா தொடர்பான அறிவிப்புகள் மட்டுமல்லாமல் அனைத்து அரசாணைகள், அறிவிப்பாணைகள், பத்திரிகை செய்திக்குறிப்புகளை இணையதளங்களில் பதிவேற்றம் செய்ய உத்தரவிடவும் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் அனிதா சுமந்த் மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, அனைத்து அரசாணைகள், அறிவிப்பாணைகள் இணையதளங்களில் பதிவேற்றம் செய்யப்படுகிறதா என்பது குறித்து பிற்பகலிக் தலைமை நீதிபதி அமர்வில் விளக்கமளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்ற பரிந்துரைத்தது.

பிற்பகல் இந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்த போது, கடந்த 18ம் தேதி வரை பிறப்பிக்கப்பட்ட அனைத்து அரசாணைகள், அறிவிப்பாணைகள் இணையதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார்.

இதை பதிவு செய்த நீதிபதிகள், கொரோனா தொடர்பான அனைத்து அரசாணைகள், அறிவிப்பாணைகளை அரசின் இணையதளங்களிலும், ஸ்டாப் கொரோனா இணையதளத்திலும் பதிவேற்றம் செய்ய உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.


Share this:

Related posts

தூய்மையான நகரங்கள் பட்டியல் வெளியீடு…. அநியாயத்திற்கு பின் தங்கிய சென்னை… எத்தனையாவது இடம் தெரியுமா?

MANIMARAN M

எல்லா பணமும் கொரோனா சிகிச்சைக்கு தான்… முதல்வர் மு.க.ஸ்டாலினின் அடுத்த அதிரடி…!

NEWSKADAI

சென்னை மக்களுக்கு நற்செய்தி தந்த கொரோனா..!

MANIMARAN M

மீண்டும் கொரோனா ஊரடங்கு நீட்டிப்பு – தமிழக அரசு

AFRIN

“இந்தி தெரிந்தால் தான் இந்தியரா..?” கன்னடர்கள், பஞ்சாபிகள், வங்காளிகள் போர்கொடி…

MANIMARAN M

“மாணவர்களின் மனித கடவுளே”… ஆல் பாஸ் போட்ட முதல்வரை போஸ்டர் ஒட்டி திக்குமுக்காட வைக்கும் மாணவர்கள்…!

MANIMARAN M