Newskadai.com
இந்தியா

தடையை மீறி நுழைய முயற்சி… ராகுல் மீது லத்தி அடி, கைது நடவடிக்கை… பரபரப்பில் உ.பி…!

Share this:

கடந்த செப்டம்பர் 14ம் தேதி உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் 19 வயதான தலித் பெண் நான்கு பேரால் கடத்திக் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். மிகவும் காட்டுமிரண்டித்தனமாக நடந்து கொண்ட அந்த கும்பல், அப்பெண்ணின் முதுகுத் தண்டு, கழுத்து ஆகிய பகுதிகளில் உள்ள எலும்புகளை அடித்து நொறுக்கியும், நாக்கை அறுத்தும் கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இதையடுத்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அந்த பெண்ணை அப்பகுதியினர் மீட்டு உத்தரப்பிரதேசத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு மிகவும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த அந்த பெண், டெல்லியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து அந்த பெண்ணின் உடலை எரிக்க போலீசார் வற்புறுத்தியதாகவும், அதற்கு சம்மாதிக்காததால் அவர்களே அந்த உடலை எரித்ததாகவும் கூறப்படுகிறது.

 

இந்த சம்பவத்தால் டெல்லி மற்றும் ஹத்ராஸ் பகுதிகளில் போராட்டம் வெடித்துள்ளது. நாட்டையே உலுக்கியுள்ள இந்த சம்பவத்திற்கு எதிராக பலரும் கண்டன குரல் எழுப்பியுள்ளனர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்கச் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் சென்றனர். ஆனால் தற்போது அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனால் அங்கு கூட்டம் கூடக்கூடாது எனக்கூறி போலீசார் ராகுல் காந்தி உள்ளிட்டோரை தடுத்து நிறுத்தினர். பிரியங்கா, ராகுல் காந்தி வந்த கார் கிரேட்டர் நொய்டா பகுதிலேயே தடுத்து நிறுத்தினர். இதையடுத்து ஹத்ராஸ் பகுதிக்கு செல்ல 142 கிலோ மீட்டர் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ராகுல் காந்தியும், பிரியங்காவும் நடக்க ஆரம்பித்தனர்.

இதையடுத்து ராகுல் காந்தியை போலீசார் கைது செய்தனர். அப்போது போலீசார் தன்னை கீழே தள்ளியதாகவும், லத்தியால் அடித்ததாகவும் குற்றச்சாட்டினார். மேலும் நாட்டில் மோடி மட்டுமெ தான் நடக்க வேண்டுமா என்ற கேட்க விரும்புகிறேன்? சாதாரண மனிதர்கள் நடக்க கூடாதா என்றும் ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.


Share this:

Related posts

“ராமரின் வரலாற்றை எவராலும் அழிக்க முடியாது”… பிரதமர் மோடி பெருமிதம்…!!

THAVAMANI NATARAJAN

புதிய கல்விக்கொள்கை 2020 : ஆகஸ்ட் 31 வரை கருத்து தெரிவிக்கலாம் – மத்திய அரசு

MANIMARAN M

தனியாருக்கு தாரை வார்க்கப்படும் ரயில்வே… சத்தமே இல்லாமல் வேகமெடுக்கும் பணிகள்…!!

MANIMARAN M

கொரோனாவுடன் மருத்துவமனையில் இருந்து தப்பிய நபர்… புதரில் சடலமாக மீட்பு….!!

NEWSKADAI

தமிழக பதிவு எண் கொண்ட காரில் பாகிஸ்தான் கொடி… கர்நாடக போலீசார் செய்த தரமான சம்பவம்…!!

THAVAMANI NATARAJAN

“அவனே கொலைகாரன்; அவனே வழக்கு தொடுப்பவன்” அப்படி என்றால் இதுதான் நீதி… விளாசும் ஓவைசி…!!

MANIMARAN M