Newskadai.com
இந்தியா

“விவசாயத்தை காப்பாற்றுங்கள்”…. கண்ணியமான கோரிக்கையை கலவரமாக்கிய போலீசார்… விவசாயிகள் மீது வன்முறை தாக்குதல்…!!

Share this:

ஹரியானாவை ஆளும் பாஜக அரசுக்கு எதிராக விவசாய அமைப்புகள் நேற்றைய தினம் பேரணி ஒன்றை நடத்தியது. ஹரியானாவில் குருசேத்திரம் மாவட்டம் பிப்லீ தேசிய நெடுஞ்சாலையில் விவசாய அமைப்புகள் பேரணி சென்றனர்.

“கிசான் பச்சாவ், மண்டி பச்சாவ்” என மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி சென்ற போராட்டக்காரர்களை மேலும் முன்னேற விடாமல் காவல்துறை தடுத்து நிறுத்தியது. இதனால் அங்கு பதட்டம் நிலவியது. ஷா பாத் என்ற பகுதியில் இருந்து பேரணியில் கலந்துகொள்ள வந்த விவசாயிகள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர். இதனால் இந்த இடம் கலவர பூமியாக மாறியது.

இதுகுறித்து ஹரியானா பி கே யு தலைவர் குர்ணம் சிங் சாருனி செய்தியாளர்களிடம் சிறு-குறு விவசாயிகளை அழித்து கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு பட்டுக் கம்பளம் விரிக்கும் விவசாயிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் திரும்பப் பெறப்படாத வரை விவசாயிகள் நாடு முழுவதும் பேரணிகளையும் ஆர்ப்பாட்டங்களையும் தொடர்ந்து நடத்துவார்கள். இந்தப் போராட்டம் அடக்குமுறை அரசாங்கத்திற்கு எதிரான முதல் வெற்றி என்று கூறினார்


Share this:

Related posts

“வெட்கங்கெட்ட ஆட்சி”… முற்றும் சிவசேனா – பாஜக மோதல்…!!

NEWSKADAI

கொரோனா தொற்றுக்கு பலிகடா ஆக்கப்பட்ட தப்லீக் ஜமாஅத்… அரசுக்கு குட்டு வைத்த மும்பை உயர்நீதிமன்றம்…!!

MANIMARAN M

நாய்கள் பராமரிக்க ஆட்கள்தேவை கல்வித்தகுதி : பி.ஏ. பிஎஸ்சி. பிடெக்

NEWSKADAI

இன்று முதல் ஜியோவின் அதிரடி ஆரம்பம்… 30 நாட்களுக்கு இலவசம்… வெறும் 399-ல் குறைவில்லாத டேட்டா…!!

AMARA

ரஷியாவின் கொரோனா தடுப்பூசி வரும் நவம்பர் மாதம் இந்தியாவில் கிடைக்க வாய்ப்பு…

MANIMARAN M

தொலைபேசி ஒட்டுக்கேட்பு : விளக்கமளிக்க மத்திய உள்துறை உத்தரவு.

NEWSKADAI