Newskadai.com
உலகம்

தூய்மை பணியாளர்களை கெளரவித்த சவுதி அரசு… ஹஜ் பயணத்தில் தனி மரியாதை…!!

Share this:

சவுதி அரேபியாவின் மக்கா நகர வீதிகளில் உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் கூடும் பல லட்சம் மக்கள் காலடி தடங்களுடன்  நடைபெறும் புனித பயணமான ஹஜ் யாத்திரை, கொரோனாவின் கோரப்பிடியால் இவ்வருடம் ஆயிரம் பேர்களோடு நேற்று துவங்கியுள்ளது. சவுதி அரேபியாவில் வசிப்பவர்கள், தங்கள் வாழ்நாளில் இதுப் போன்ற வெறுமை நிறைந்த யாத்ரீகள் இல்லாத நிகழ்வைக் கண்டதில்லை என்று கூறுகின்றார்கள்.

 

மேலும் படிக்க:http://குஷியான செய்தி: லாக்டவுனை தவிடு பொடியாக்கிய ஐபிஎல்… செப்டம்பரில் போட்டிகள் தொடக்கம்!!

வருடா வருடம் உலகின் பல நாடுகளிலிருந்து சுமார் 25 லட்சம் மக்கள் இப்புனித யாத்திரைக்காக கூடுவர். ஆனால் இவ்வருடம், இடைவெளி பேணுதல், கூட்ட நெரிசலை தடுத்தல் போன்ற கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக வெளிநாட்டு ஹஜ் பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஹஜ் பயண சிறப்பு அனுமதி தற்சமயம் உள்நாட்டில் உள்ள 20 முதல் 50 வயது வரையிலான 1000 பேருக்கு மட்டும் வழங்கப்பட்டது. இதில் 30% பேர் மட்டுமே சவுதி அரேபிய குடிமக்கள் மீதமுள்ள 70% பேர் வெளிநாட்டு குடியிருப்பாளர்கள்.

மேலும் படிக்க:http://கொரோனா நேரத்தில் இதுவும் நடக்கலாம்… மக்களை உஷார் படுத்திய காவல்துறை…!

இஸ்லாமியர்களின் ஐந்து கடமைகளில் ஒன்றான இந்த ஹஜ் புனித பயணத்தை மேற்கொள்ள இருந்தவர்கள் இவ்வருடம் ரத்து செய்யவும், வரும் வருடங்களுக்கு தள்ளிப் போடவும் சவுதி அரேபிய அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது.

சவுதி அரேபியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை சுமார் 3 லட்சத்தை நெருங்கும் வேலையில், இதற்காக தன்னலமில்லாமல் தன் உயிரைப் பணயம் வைத்து மக்கள் உயிரை காக்க போராடும் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரத்துறை பணியாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களை அங்கீகரிக்க முடிவு செய்துள்ளது சவுதி அரசு. அதன்படி, இந்த ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ள 1000 பேரில் சுகாதாரத்துறை பணியாளர்கள் 300 பேருக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Share this:

Related posts

பிரிட்டனில் கட்டாயமாகும் முகக்கவசம்.. எச்சரிக்கும் அரசு…

NEWSKADAI

அமெரிக்காவுக்கே இந்த நிலையா?…. ஆன்லைன் கல்விக்காக ஓட்டல் வாசலில் தவம் கிடக்கும் சிறுவர்கள்…!!

THAVAMANI NATARAJAN

அமெரிக்க அதிபரின் மிரட்டலுக்கு பயந்த டிக் டாக் நிறுவனம்…!!!

MANIMARAN M

ட்ரம்பின் ஆட்சிக்கு வேட்டு வைக்கும் கொரோனா… இந்தியா கொடுத்த மலேரியா மாத்திரையால் சிக்கல்…!!

NEWSKADAI

புனித பயணத்திற்கு அனுமதி… சவுதி அரசு அதிரடி அறிவிப்பு…!!

MANIMARAN M

குட் நியூஸ்: கொரோனாவை எதிர்க்க ஆயுதம் கிடைச்சாச்சு… அசுர வேகத்தில் தடுப்பூசி தயாரிக்கும் பணி தீவிரம்…!!

THAVAMANI NATARAJAN