Newskadai.com
அரசியல்

எம்.பி. வசந்தகுமார் உடல் சந்தனபேழையில் நல்லடக்கம்… தாய், தந்தை நினைவிடம் அருகே புதைப்பு…!

vasanathakumar
Share this:

கொரோனாவால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி தொகுதி எம்.பி. எச்.வசந்தகுமார் கடந்த 10ம் தேதி சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரது உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமானது. கொரோனா தாக்கம் அவருடைய நுரையீரலில் கடுமையான பாதிப்புகளை உருவாக்கியது. இதனால் வென்டிலேட்டர் மூலமாக அவருக்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 28ம் தேதி 6.56 மணி அளவில் அவரது உடலை விட்டு உயிர் பிரிந்தது.

vasanathakumar

வசந்தகுமார் உயிரிழப்பதற்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் அவருக்கு தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவருடைய உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து வசந்தகுமாரின் உடல் சென்னை தியாகராயநகரில் உள்ள அவருடைய இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி, வசந்த் அண்ட் கோ ஊழியர்கள் உட்பட ஏராளமானோர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். அதன்பின்னர் அங்கிருந்து அவருடைய உடல் சொந்த ஊரான கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்திற்கு நள்ளிரவு 12 மணிக்கு கொண்டு செல்லப்பட்டது.

vasanathakumar

அங்கு குமரி அனந்தன் தெருவில் உள்ள வீட்டில் வைக்கப்பட்ட வசந்தகுமார் உடலுக்கு காலை 6 மணி முதலே உறவினர்கள், கட்சி தொண்டர்கள், பொதுமக்கள் ஆகியோர் நீண்ட வரிசையில் காத்திருந்து அஞ்சலி செலுத்தினர். கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே, தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் சுரேஷ்ராஜன், ஆஸ்டின், மனோதங்கராஜ், காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் பிரின்ஸ், ராஜேஷ்குமார், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

vasanathakumar

இதையடுத்து வீட்டிலிருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட வசந்தகுமார் உடல் ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சுக்குப்பாறை தேரிவிளை என்ற இடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அங்குள்ள வசந்தகுமாரின் தோட்டத்தில் அவருடைய பெற்றோரின் சமாதிக்கு அருகிலேயே சந்தன பேழையில் உடல் புதைக்கப்பட்டது.


Share this:

Related posts

திமுகவின் முக்கிய பொறுப்பு யாருக்கு?

THAVAMANI NATARAJAN

பாஜகவில் அடியெடுத்து வைத்த உடனேயே இப்படியா?…. அண்ணாமலை மீது பாய்ந்தது வழக்கு…!!

NEWSKADAI

“ரஜினியால் மட்டுமே தமிழ்நாட்டுக்கு விடிவு”… திடீரென அதிரடி காட்டும் தமிழருவி மணியன்…!!

NEWSKADAI

யார் எப்படி போனால் என்ன காசு வந்தால் போதுமா?… அதிமுக அரசை விளாசிய மு.க.ஸ்டாலின்…!!

AMARA

“மு.க.ஸ்டாலினை முதலமைச்சராக்குவோம்”… திமுக பொதுக்குழு கூட்டத்தில் 13 தீர்மானங்கள் நிறைவேற்றம்…!!

NEWSKADAI

“உதயநிதி ஸ்டாலின் பரம்பரையே Play Boy தான்”… பங்கமாக கலாய்த்த அமைச்சர் ஜெயக்குமார்…!!

AMARA