Newskadai.com
தமிழ்நாடு

கோவை விமான நிலையத்தில் திடீர் பரபரப்பு… டாய்லெட்டில் கண்டெடுக்கப்பட்ட தோட்டாக்களால் அதிர்ச்சி…!

Share this:

விமான நிலையத்திற்குள் அனுமதி இல்லாத பொருட்களை எடுத்துச் செல்வது என்பது சாதாரண விஷயமல்ல. கோவை விமான நிலையத்தில் முதல் வாயிற் பகுதிகளில் மத்திய தொழிற்பாதுகாப்பு படையினரின் சோதனை நடைபெறும், அதன் பின்னர் பயணிகள் கொண்டு வரும் பைகளை சோதனையிடுவதற்கு என்றே தனி ஸ்கேனர்கள் உள்ளன. அங்கு உடமைகள் அனைத்தும் ஸ்கேன் செய்யப்படும். அதில் எவ்வித சந்தேகமும் இல்லாத பெட்டிகள் மட்டுமே கன்வெயர் பெல்ட் வழியாக சென்று விமானத்திற்கு ஏற்றப்படும், அதற்கு முன்னதாகவும் ஒரு ஸ்கேன் சோதனை செய்யப்படுவது வழக்கம்.

Covai

இந்த சோதனைகளையும் கடக்க வேண்டிய நிலையில், கோவை விமான நிலையத்தில் செக் இன் கவுண்டருக்கு முன்னால் இருக்கும் ஆண்கள் கழிப்பறையில் இருந்து துப்பாக்கி தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கழிப்பறையில் பழுது நீக்கும் வேலைகளை மேற்கொள்ள பிளம்பர் ஒருவர் சென்றுள்ளார். அவர் அங்கு சில இரும்பு துண்டுகள் இருப்பதை கண்டு மத்திய தொழிற்படையினருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

Covai

அங்கு வந்த மத்திய தொழிற்படையினர் கழிப்பறையில் கிடந்த 6 துண்டுகளை எடுத்து ஆய்வு நடத்தினர், அதில் அவை அனைத்தும் துப்பாக்கி தோட்டாக்கள் என்பது தெரியவந்தது. 4 தோட்டாக்களில் வெடிமருந்து உள்ளது, அதில் 3 பிஸ்டல் வகையையும், ஒன்று இயந்திர துப்பாக்கி வகையையும் சேர்ந்தது. மற்ற 2 தோட்டாக்களில் எவ்வித வெடிமருந்தும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இதுகுறித்து மத்திய தொழிற்படையினர் அளித்த புகாரின் பேரில் பீளமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Share this:

Related posts

காதலுக்கு எதிர்ப்பு?… தற்கொலை செய்து கொண்ட காதலியின் சடலத்துடன் உடன்கட்டை ஏறிய காதலன்…!

THAVAMANI NATARAJAN

3 வருஷமா ஒரே பாணியில் திருட்டு… போலீசில் சிக்காமல் “டிமிக்கி” கொடுத்த கார் டிரைவர் சிக்கியது எப்படி?

THAVAMANI NATARAJAN

ஆன்லைன் வகுப்பால் மன அழுத்தம்… பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை…!!

THAVAMANI NATARAJAN

அக். 5 க்குள் சத்துணவு மைய காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்…

MANIMARAN M

மாமா… டவுசர் கழறாம பாத்துக்கோ…. மப்ப விட மானம் முக்கியம் தெரிஞ்சுக்கோ…

MANIMARAN M

சேலத்துக்கு வந்தாச்சு அதி நவீன கண்காணிப்பு கேமரா… இனி ஹெல்மெட் போடாம ‘எஸ்’ ஆக முடியாது…!

THAVAMANI NATARAJAN