Newskadai.com
தமிழ்நாடு

பாலத்திலிருந்து தவறி விழுந்து இளைஞர் பரிதாபமாக பலி… உடலை வாங்க வந்த உறவினர் அதிர்ச்சியில் மரணம்…!

Death
Share this:

தஞ்சாவூர் மாவட்டம், பள்ளி அக்ரஹாரம் பகுதியல் வசித்து வரும் சோமு என்பவரின் மகள் இளவரசன்(30) கடந்த இரண்டு ஆண்டுகளாக பெருந்துறை சிப்காட் என்ற தனியார் நிறுவனத்தில் காவலர் பணியினை செய்து வருகிறார், தினசரி சொந்து ஊருக்கு சென்று வரமுடியாது என்பதால், ஈரோடு மாவட்டம், சென்னிமலை அடுத்துள்ள ஈங்கூர் வெட்டுக்காட்டுவளசில் தங்கி வேலைக்கு சென்று வந்துள்ளார்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன் காலை பணியினை முடித்து விட்டு இரவு நேரத்தில் வீடு திரும்பிய இளவரசன் சிப்காட் பகுதியில் அமைந்துள்ள ஒரு பாலத்தின் மீது தனது பைக்கை நிறுத்திவிட்டு பாலத்தின் மீது அமர்ந்து இருந்த போது நிலை தடுமாறி  5 அடி ஆழ பள்ளத்தில் தலைகுப்புற விழுந்துள்ளார். இதனால் அவரது தலையில் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

  Fell down

சம்பவம் நடந்த அடுத்த நாள் அந்த பாலத்தில் வழியாக சென்ற நபர் ஒரு பைக் தனியாக நிற்பதை கண்டு பாலத்தில் கீழே பார்த்துள்ளார், பாலத்தின் கீழ் தலைகுப்புற ஒருவர் இறந்து கிடப்பதை கண்டு சென்னிமலை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது, அதன் பின் போலீசார் விரைந்து வந்து இளவரசனின் உடலை பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.Perundurai Hospital

இளவரிசனின் உடற்கூறு ஆய்வுக்கு பின் அவரது உடலை இளவரிசனின் உறவினர்களான மணிகண்டன், பவுன்ராஜ், சோழராஜன் ஆகியோர் தஞ்சாவூருக்கு ஆம்புலன்சில் எடுத்து சென்றுள்ளனர், ஆம்புலன்ஸ் கொடுமுடியை அடுத்துள்ள நொய்யல் பகுதியில் சென்று கொண்டிருந்த போது இளவரசன் உடல் அருகில் இருந்த மணிகண்டன் திடீரென மயங்கி விழுந்ததால் அவரை அதே ஆம்புலன்சில் கொடுமுடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மணிகண்டன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். மணிகண்டன் இறந்தது குறித்து கொடுமுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து உடன் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.இந்த சம்பவம் அவரது உறவினர்களிடையே பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க http://மதுரையில் அருகே நடக்க இருந்த ரெயில் விபத்து… இஞ்சின் டிரைவருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி


Share this:

Related posts

கந்த சஷ்டி கவச அவதூறு: கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்…!!

NEWSKADAI

“நிலம் கையக்கப்படுத்த உரிமையாளரிடம் ஆலோசிக்க தேவையில்லை”…. அதிரடி சட்டத்தை நிறைவேற்றியது தமிழக அரசு…!!

MANIMARAN M

பொறியியல் இறுதி செமஸ்டர் தேர்வு அட்டவணை வெளியீடு…

MANIMARAN M

அதிகரிக்கும் மேட்டூர் அணையின் நீர்மட்டம்… விவசாயிகள் மகிழ்ச்சி..

THAVAMANI NATARAJAN

6 வருடங்களாக அலைக்கழிப்பு… மேட்டூர் தாசில்தார் காலில் விழுந்து கதறிய அபலை பெண்…!

THAVAMANI NATARAJAN

சூர்யாவிற்கு எதிராக நள்ளிரவில் கொதித்தெழுந்த உயர்நீதிமன்ற நீதிபதி…

MANIMARAN M