Newskadai.com
கேலரி

இந்தியாவில் இப்படியும் சில ஆசிரியர்கள் இருக்கிறார்கள்… கொரோனாவுக்கே டப் கொடுக்கும் சூப்பர் ஹீரோக்கள்…!!

Share this:

கோவை வடவள்ளி அருகே உள்ள சோமயம்பாளையத்தில் ஆண்ட்ராய்ட் மொபைல் இல்லாத அரசு பள்ளி மாணவர்களுக்கு அவர்களின் பகுதிக்கே சென்று கோவில்கள் மற்றும் மரத்தடியில் பாடம் நடத்தி அசத்தி வரும் அரசு பள்ளி  ஆசிரியர் கருப்புசாமி.

Govt Teacher


கரூர் மாவட்டதில் உள்ள க.பரமத்தி ஒன்றியத்தில் இருக்கும் தொட்டியபட்டி. கரூர் மாவட்டத்தின் மேற்கு எல்லையான திருப்பூர் மாவட்டத்தையொட்டி இருக்கும் ஊரில் வசிக்கும் தனது பள்ளியைச் சேர்ந்த 57 மாணவர்களுக்கும், 110 கிலோமீட்டர் தூரம் தனது பைக்கிலேயே சென்று விலையில்லா பாடப்புத்தகங்களை வழங்கி, பாடம் நடத்தும் தலைமை ஆசிரியர் மூர்த்தி.

Govt Teacher


Govt Teacher


விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகில் அமைந்துள்ள  படிக்காசுவைத்தான்பட்டி கிராமம். இங்கு உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணி புரிந்து வரும் ஜெயகுமார் ஞானராஜ் அவர்கள், இந்த கல்வி ஆண்டுடில் இப்பள்ளியில் புதிதாக சேரும் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் தனது சொந்த செலவில் ரூ.6,500 மதிப்புள்ள புதிய ஸ்மார்ட் போன்களை வாங்கிக் கொடுத்து அசத்தியுள்ளார்.

Govt Teacher


கொரோனா ஊரடங்கால் தவிக்கும் தனது பள்ளி மாணவர்களுக்கு, வீடு தேடி சென்று உதவி வருகிறார், துப்பாபுரம் பஞ்சாயத்து பள்ளிக்கூடத்தின் தலைமை ஆசிரியை கண்ணகி, சக ஊழியர் பரமேஷ்வரி வரதராஜன் உடன் இணைந்து 41 குடும்பங்களுக்கும் தலா 1000 ரூபாய் வழங்கி உதவியுள்ளார்.

Govt Teacher


மாணவர்களின் நலனை கருதி முகக்கவசம் அணிந்து, தகுந்த சமூக இடைவெளியுடன் மாணவர்களை அவர்களின் வசிப்பிடப் பகுதியில் ஒருங்கிணைத்து பாடம் நடத்தும், மதுரை அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள்.

Govt Teacher


ஜார்கண்ட் மாநிலம், தும்கா மாவட்டத்தின் பங்கதி கிராமத்தில் அமைந்துள்ள அரசு நடுநிலை பள்ளியை சேர்ந்த ஆசிரியர்கள், ஊரடங்கு சமயத்தில் மாணவர்களுக்கு ஒலிபெருக்கி மூலம் பாடம் எடுத்து வருகிறார்கள். பள்ளி தலைமை ஆசிரியர் ஷியாம் கிஷோர் சிங் காந்தியின் இந்த புதிய முயற்சியை அனைவரும் பாரட்டி வருகிறார்கள்.

Govt Teacher


போட்டிப் போட்டுப் பாடப் புத்தகங்களை படிக்க வைப்பதற்குப் பதிலாகக் குழந்தைகளின் கற்பனைத் திறனை மீட்டெடுக்கும் முயற்சியாக கதைப் புத்தகம், பலூன், வண்ணக் காகிதம், பென்சில், சாக்பீஸ், மெழுகுவர்த்தி, ரப்பர் பேண்டு போன்றவற்றை எடுத்துச் சென்று சாமானிய மக்களின் குழந்தைகளுடன் பேசி, விளையாடி, கதை சொல்லி, பாட்டுப் பாடி, எளிய அறிவியல் சோதனைகள் மற்றும் குட்டிக் குட்டி மேஜிக் செய்து காட்டி குழந்தைகளின் திறமைகளை வளர்த்து வரும் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தை சேர்ந்த மதுரையில் உள்ள வாசல் பதிப்பகத்தின் பதிப்பாளர் ரத்னவிஜயன் ஆசிரியர்களை ஒன்றினைத்து மாணவர்களுக்கு இந்த புதிய முயற்சியை செய்து வருகிறார்.

Teacher

Govt Teacher


Share this:

Related posts

‘கொரோனா’ வாங்க கறிக்கடை, மீன் மார்க்கெட்டில் குவிந்த மக்கள்… அலட்சியத்தின் உச்சம்…!!

AMARA

தமிழகத்தில் கொரோனா… (30-08-2020) இன்றைய நிலை…!?

NEWSKADAI

இப்படி இருந்த லட்சுமி மேனன்… இப்ப எப்படி இருக்காங்க பார்த்தீங்களா?

AMARA

மீண்டும் வெளியே வந்த ஜலகண்டாபுரம்… கொரோனாவிலிருந்து மீண்டு வருமா!?… எக்ஸ்குளூசிவ் போட்டோஸ்…!!

POONKUZHALI

அப்பா கண்ண திறங்க… கதறி அழுத ‘வடிவேல்’ பாலாஜி மகள்… கண்களை கலங்க வைக்கும் இறுதிக்காட்சிகள்…!

AMARA

ONAM SPECIAL : நயன்தாரா, சாய் பல்லவி, கீர்த்தி சுரேஷ், அமலா பால்… கேரள புடவையில் கிறங்கடிக்கும் அழகிகள்…!

NEWSKADAI