Newskadai.com
அரசியல்

கொரோனாவை வென்றார் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்… 80 வயதிலும் மன உறுதிக்கு கிடைத்த வெற்றி…!!

Share this:

 

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிலும் கொரோனாவுக்கு எதிராக போடும் முன் களப் பணியாளர்களான அரசு ஊழியர்கள், மருத்துவர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவல்துறையினர் உட்பட எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்டோரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

Governor

கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் முதலில் 85 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், கடந்த 29ம் தேதி மேலும் 3 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து ஆளுநர் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டார். இதையடுத்து கடந்த 2ம் தேதி ஆளுநர் கொரோனா பரிசோதனைக்காக தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

Governor

அதன்படி, 12 நாட்களாக சிகிச்சை மேற்கொண்டு வந்த ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திற்கு கொரோனா தொற்றுக்கான அறிகள் இல்லை என காவேரி மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் ஆளுநரின் மன உறுதியும், ஒத்துழைப்பும் தான் அவர் கொரோனா தொற்றிலிருந்து மீள காரணம் என்றும் குறிப்பிட்டுள்ளது.

Governor


Share this:

Related posts

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சி.மகேந்திரனுக்கு கொரோனா தொற்று உறுதி…!!

NEWSKADAI

திமுகவின் முக்கிய பொறுப்பு யாருக்கு?

THAVAMANI NATARAJAN

இன்று தெரிந்துவிடும் அடுத்த முதல்வர் யாரென்று… முடிவுக்கு வரபோகும் உட்கட்சி பூசல்…

MANIMARAN M

எகிறி அடிக்கும் பாஜக… அமைதி காக்கும் அதிமுக… கொதிக்கும் தொண்டர்கள்…

NEWSKADAI

பிஎஸ்பிபி பள்ளி ஆசிரியர் மீது தொடரும் பாலியல் புகார் – மற்றொரு ஆசிரியர் கைது…!

AFRIN

இந்த தளத்திற்கு சென்றால் ரெம்டெசிவிர் மருந்தை பெறலாம் – அரசின் அதிரடி அறிவிப்பு

MANIMARAN M