Newskadai.com
தமிழ்நாடு

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்… விதிமுறைகள் குறித்த அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு…!!

Share this:

கடந்த பிப்ரவரி மாதம் தமிழகத்தின் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, கரூர், அரியலூர், கடலூர், புதுக்கோட்டை ஆகிய 8 மாவட்டங்களில் காவிரி பாயும் பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். மேலும் ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட திட்டங்களை தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம் எனவும் முதல்வர் தெரிவித்தார்.

இந்த அறிவிப்பு தமிழக விவசாயிகள் மத்தியில் குறிப்பாக டெல்டா விவசாயிகளிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. இந்நிலையில், அந்த சட்டத்தில் புதிய அம்சங்களை சேர்க்கவும், திருத்தங்களை மேற்கொள்ளவும் அரசுக்கு பரிந்துரைக்க தமிழக அரசு தொழில்நுட்ப குழுவை அமைத்து இன்று அரசாணையை வெளியிட்டுள்ளது.

அந்த தொழில்நுட்ப குழு கீழ்கண்டவாறு அமைக்கப்பட்டுள்ளது.

தலைவராக…
  • வேளாண்துறைச் செயலாளரும்
உறுப்பினர்களாக…
  • வேளாண் மற்றும் தோட்டக்கலை துறை இயக்குநர்
  • தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவர்
  • தொழில்துறை இயக்குனர்
  • கால்நடைகள் துறை இயக்குனர்
  • வேளான் பல்கலைக்கழக இயக்குனர்

ஆகியோர் உறுப்பினர்களாக இருந்து செயல்படுவார்கள்.

இந்த தொழில்நுட்பக் குழு வேளாண் தொழில்களைச் சட்டத்தில் சேர்ப்பது, வேளான் மண்டல பகுதிகளில் நீர் ஆதாரங்கள், இயற்கை வளங்களைப் பாதுகாப்பது போன்ற அம்சங்களில் பரிசீலனை செய்து அரசுக்கு பரிந்துரை செய்யும். அதனடிபடையில் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Share this:

Related posts

வெளிமாநில தொழிலாளர்களை அழைத்து வர உடனடி இ-பாஸ்… முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு…!!

AMARA

கோட்டையில் கொடியேற்றினார் முதல்வர்… அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு அசத்தல்…!!

THAVAMANI NATARAJAN

ஸ்கூல் இருக்கு…. ஆனா இல்ல… மாணவர்களை குஷி படுத்திய அறிவிப்பு

MANIMARAN M

தடை விதிக்கப்படாத நீட் தேர்வு… அனிதாவின் 3ம் ஆண்டு நினைவு தினத்திலும் நீடிக்கும் சோகம்…!!

THAVAMANI NATARAJAN

காதலனுடன் ஓடிப்போன மகளுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய தந்தை…

MANIMARAN M

“8 முறை கோரிக்கை வைத்தும் எதுவும் கண்டுக்கல”…. போராட்டத்தில் குதித்த அரசின் முக்கிய துறை…!

THAVAMANI NATARAJAN