கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவல் காரணமாக நாடு முழுவதும் பல ஆயிரக்கணக்கானோர் வேலை இழந்து நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது “இந்த இக்கட்டானக் காலக்கட்டத்தில், மத்திய பிரதேச அரசு இப்படி ஒரு முக்கியமான முடிவை எடுத்துள்ளது, மத்திய பிரதேச அரசு இன்று ஒரு முக்கியமான முடிவை எடுத்துள்ளது.
மத்திய பிரதேசத்தில் அரசு வேலைகள் மாநில இளைஞர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். அதற்கு தேவையான சட்ட நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொள்வோம். மத்திய பிரதேசத்தின் வளங்கள் மத்திய பிரதேசத்தின் குழந்தைகளுக்கு மட்டுமே” என்று சிவ்ராஜ் சிங் சவுகான் கூறியுள்ளார். மேலும் “உள்ளூர் இளைஞர்களுக்கு பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் வேலைவாய்ப்பை உறுதி செய்வதற்கான ஒரு செயல்முறையை நாங்கள் உருவாக்குவோம் என்று கூறியுள்ளார்.
கடந்த சனிக்கிழமை சுதந்திர தினத்தன்று உரையாற்றிய முதல்வர், “மத்தியப் பிரதேச இளைஞர்களுக்கு அரசு வேலைகளில் முன்னுரிமை வழங்கப்படும். வேலை வாய்ப்புகள் பற்றாக்குறையாக இருக்கும் இந்த நேரத்தில் நமது மாநில இளைஞர்கள் குறித்து அக்கறை கொள்வது நமது கடமையாகும்” என்று கூறியது குறிப்பிடதக்கது. இதனிடையே கடந்த மார்ச் மாதம் ஆட்சியை இழந்த காங்கிரஸ் கட்சி முன்னாள் முதல்வர் கமல்நாத் ஏற்கனவே மத்திய பிரதேசத்தில் உள்ள தனியார் துறை வேலைகளில் 70 சதவிகிதம் மாநில மக்களுக்கு ஒதுக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.
मैंने अपनी 15 माह की सरकार में प्रदेश के युवाओं को प्राथमिकता से रोज़गार मिले , इसके लिये कई प्रावधान किये।
मैंने हमारी सरकार बनते ही उद्योग नीति में परिवर्तन कर 70% प्रदेश के स्थानीय युवाओं को रोज़गार देना अनिवार्य किया।
1/5— Office Of Kamal Nath (@OfficeOfKNath) August 18, 2020
தற்சமயம் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகானின் இந்த அறிவிப்பிற்கு தனது ட்விட்டர் பக்கத்தில் “எங்கள் ஆட்சிக்கு முன் பதினைந்து வருடங்கள் ஆட்சிப் புரிந்த நீங்கள் எத்தனை இளைஞர்களுக்கு வேலைக் கொடுத்தீர்கள்” என்று காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், “குறைந்தபட்சம் 15 ஆண்டுகளுக்கு பிறகு இப்போதவது நீங்கள் வேலை நெருக்கடியைப் பற்றி யோசிக்கின்றீர்கள், மாநில மக்களுக்கு முன்னுரிமை அளித்து வேலைகளை ஒதுக்கீடு செய்யவேண்டும் என்ற எங்களது கொள்கை முடிவைப் பின்பற்றுகிறீர்கள். இருப்பினும், இது காகிதத்தில் இருக்கும் ஒரு அறிவிப்பாக மட்டுமே இருந்து விடக்கூடாது. ” என்று பதிவிட்டுள்ளார்.