Newskadai.com
தமிழ்நாடு

அக்.15ல் தியேட்டர்கள் திறப்பு… இனி இப்படித்தான் படம் பார்க்க முடியும்… புதிய வழிமுறைகள் வெளியீடு!

Share this:

கொரோனா தொற்று நோய் பரவலை தடுக்கும் நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. மத்திய மாநில அரசுகள் பொது மக்கள் நலன் கருதி சில தளர்வுகளையும் அறிவித்து வருகிறது. அக்டோபர் 15 தேதி முதல் திரையரங்குகள் திறக்க மத்திய அரசு அனுமதித்துள்ளது. திரையரங்குகள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

திரையரங்குகள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள்

  • திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளில் மட்டுமே பார்வையாளர்களுக்கு அனுமதிக்க வேண்டும்.
  • திரையரங்கிற்கு வரும் பார்வையாளர்களுக்கு உடல் வெட்பநிலை பரிசோதனை செய்த பின்பு தான் திரையரங்கிற்குள் அனுமதிக்க வேண்டும்.
  • கொரோனா அறிகுறி தென்பட்டால் அவர்களை திரையரங்கில் அனுமதிக்க கூடாது.
  • திரையரங்கிற்கு வரும் பார்வையாளர்களுக்கு சானிடைசர் வழங்க வேண்டும்.
  • பார்வையாளர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.
  • திரைப்படத்தின் இடைவேளை நேரத்தில் பார்வையாளர்கள் தங்களின் இருக்கையில் இருந்து வெளியேறாமல் இருக்க வேண்டும்.
  • திரையரங்குகளில் பாதுகாப்பான கவர்களில் அடைக்கப்பட்டிருக்கும் உணவுப் பொருட்களை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும்.
  • திரைப்படம் தொடங்குவதற்கு முன்பும், இடைவேளையின் பொழுதும் கொரோனா விழிப்புணர்வு குறும்படங்களை திரையிட வேண்டும்.
  • பார்வையாளர்கள் கூட்டம் சேராமல் இருக்க டிக்கெட் கவுண்டர்கள் நாள் முழுவதும் திறந்திருக்க வேண்டும்.

Share this:

Related posts

தமிழகத்தில் ஆகஸ்ட் 31ம் தேதி வரை ஊரடங்கு… எவற்றுக்கெல்லாம் தளர்வுகள் அறிவிப்பு….!

NEWSKADAI

வசமாக சிக்கிய ஆதாரம்… மத கலவரத்தில் இருந்து தப்பிய கோவை… பகீர் வீடியோ…!!

MANIMARAN M

சேலத்தில் வீடு இடிந்து விழுந்து விபத்து: இடிபாடுகளில் சிக்கி முதியவர் பரிதாபமாக பலி…!!

THAVAMANI NATARAJAN

8 வயது சிறுவனை காவு வாங்கிய ‘குப்பை’… ஈரோட்டில் நடந்த பரிதாபம்..!!

THAVAMANI NATARAJAN

பாதிக்குமேல் அதிகரித்த கொரோனா பாதிப்பு… பீதியில் ஜலகை மக்கள்…

MANIMARAN M

தீபாவளியை முன்னிட்டு 200 சிறப்பு ரயில்கள்… கொரோனா பாதுகாப்புடன் இயங்கும்..!!

THAVAMANI NATARAJAN