பெண்களின் பாதுகாப்பு என்பது மிகவும் குறைந்து கொண்டே வருகிறது. அதிலும் சிறுமிகளை பாதுகாப்பது மிகவும் கடினமாக உள்ளது. நண்பர், உறவினர் என யாரையும் நம்பமுடியாதளவிற்கு அக்கம்பக்கத்தில் சில காமகொடூரர்கள் வாழ்ந்து வருகிறார்கள். சிவகங்ககை மாவட்டம் காரைக்குடி பொன்நகர் பகுதியில் வசிக்கும் 40 வயது பாலாஜி. மாற்றுத்திறனாளியான இவர் மதுரை ஜ.ஜி அலுவலகத்தில் தட்டச்சராக பணியாற்றி வருகிறார். இவரது மனையி சத்யா, மதுரை அரசு உயர்நிலை பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில் பாலாஜியின் வீட்டருகே அவரது நண்பர் வசித்து வந்துள்ளார். இவருக்கு இரு மகள்கள் உள்ளனர். அவர்களில் 7 வயது சிறுமியிடம் பாலாஜி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பொம்மைத் துப்பாக்கியை காட்டி பெற்றோரை சுட்டுக் கொன்று விடுவதாக அச்சுறுத்தியுள்ளார். அவர் கூறியதை உண்மையென நம்மி சிறுமி பாலாஜி சொல்வதை கேட்பதாக ஒப்புக்கொண்டார். இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட அரக்கன் சிறுமி என்றும் பாராமல் பாலியல் தொந்தரவு செய்துள்ளான். மேலும் பெற்றோரிடம் கூறினால் சுட்டு விடுவதாக மிரட்டவே பயந்துபோன சிறுமி பெற்றோரிடம் எதையும் கூறவில்லை. இந்நிலையில் மாட்டுப் பொங்கல் தினத்தன்று, நண்பர் வீட்டிற்கு இலை வாங்குவதற்காக பாலாஜி சென்றுள்ளார்.
அப்போது அந்த சிறுமி அவரை கண்டதும் பயந்து அம்மாவை கட்டிப் பிடித்துக் கொண்டுள்ளார். சந்தேகமடைந்த சிறுமியின் தாயார் பாலாஜியை பார்த்து ஏன் பயந்தாய் என கேடுள்ளார். அப்போதுதான் பாலாஜியின் பாலியல் தொந்தரவு குறித்து தெரியவந்தது. சிறுமியின் வாக்குமூலத்தை செல்போனில் பதிவு செய்து அதன் அடிப்படையில் காரைக்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். தகவல் அறிந்த அக்கம்பக்கத்தினர் பாலாஜி வீட்டிற்குள் புகுந்து அவரை தாக்க முயன்றுள்ளனர். தகவல் அறிந்த போலுசார் சம்பவ இடத்திற்கு விரைந்து அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர். சிறுமியென்றும் பாராமல், நண்பனின் குழந்தையென்றும் பாராமல் இவ்வாறு நடந்து கொண்ட கொடூரனின் செயல் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க: http://கட்டுபாட்டை இழந்த சரக்கு லாரி …சாலையோரம் தூங்கிய 13 பேர் பலி..!