Newskadai.com
இந்தியா

மாணவர்களுக்கு இலவச ஆன்ட்ராய்டு போன்… அரசின் அதிரடி அறிவிப்பு….!!

Share this:

உலகளவில் கொரோனா பெருந்தொற்றினால் மக்கள் கடும் பாதிப்புகளை சந்தித்து வருகின்றன. பல நாடுகளில் பள்ளிக் கல்லூரிகள் இன்னும் மூடப்பட்டுள்ளன. இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுக் கொண்டு வருகிறது. குறிப்பாக பள்ளிக் கல்லூரிகள் எவ்வித சமரசமுமின்றி மூடி வைக்கப்பட்டுள்ளன. இதனால் மாணவர்களின் கல்வி கேள்விக்குள்ளாகி இருக்கிறது.

பள்ளிகள், கல்லூரிகள் திறக்கமுடியாத சூழ்நிலையால் பாடங்களை ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு பயிற்றுவிக்க நாடு முழுவதும் அரசுகளும், தனியாரும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. தமிழகத்தில் பல தனியார் பள்ளிகள் ஸ்மார்ட்போன் வழி வாட்சப் மூலமாகவும், காணொளி (வீடியோ கான்ப்ரன்சிங்) மூலமாகவும் பாடங்களை நடத்தி வருகின்றன. அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வித் தொலைக்காட்சி வாயிலாக கல்வி புகட்ட தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.

இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் ஆன்லைன் வகுப்புகளுக்காக மாணவர்களுக்கு ஸ்மார்ட் போன்கள் வழங்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. நடப்பு கல்வியாண்டில் மாநிலத்தில் சுமார் ஒரு லட்சத்து 80 ஆயிரம் மாணவர்களுக்கு ஸ்மார்ட் போன்கள் வழங்க அம்மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 501 கோடி ரூபாய் செலவில் இந்த ஸ்மார்ட் போன் வழங்கும் திட்டம் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட் போன்களில் பன்னிரண்டாம் வகுப்பு பாடங்கள் அடங்கிய இ சேவா என்ற செயலியும் உள்ளீடு செய்யப்பட்டிருக்கும் என்று பஞ்சாப் மாநில கல்வித் துறை தெரிவித்துள்ளது. அதன்படி முதற்கட்டமாக அரசு பள்ளிகளில் பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு ஐம்பதாயிரம் ஸ்மார்ட் போன்கள் விரையில் வழங்கப்படும் என்றும், வரும் நவம்பர் மாதத்திற்குள் மீதமுள்ள மாணவர்களுக்கு போன்கள் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.


Share this:

Related posts

அயோத்தி பூஜையன்று குரங்குகளுக்கு சிறப்பான கவனிப்பு… உ.பி. முதல்வரின் அதிரடி உத்தரவு…!!

NEWSKADAI

ஐந்தாம் கட்டத்தில் “வந்தே பாரத் மிஷன்”… 9 லட்சத்திற்கும் அதிகமான இந்தியர்கள் மீட்பு…!!

MANIMARAN M

திட்டமிட்டபடி நீட் தேர்வு நடந்தே தீரும்… தேர்வை ரத்து செய்யக்கோரிய மனு மீது உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!

AMARA

இன்னும் எத்தனை பிரச்சனைகளை தான் சமாளிப்பாரோ?… புது சிக்கலில் முதல்வர்…!!

MANIMARAN M

“கிளாஸ் சோடோ பாகர் ஜாவ்” : தமிழக அரசியலில் புயலை கிளப்பிக் கொண்டிருக்கும் ஹிந்தி…

MANIMARAN M