Newskadai.com
இந்தியா

மாலை நேரத்தில் வந்த நல்ல செய்தி… இனி இ-பாஸ் தேவையில்லை… மத்திய அரசு அதிரடி…!!

Share this:

இந்தியாவில் தீயாய் பரவி வரும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக மத்திய, மாநில அரசுகள் இணைந்து கடந்த மார்ச் 25ம் தேதி முதலே ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. மே மாத இறுதி வரை பொது ஊரடங்கு அமலில் இருந்த நிலையில், மாநிலத்திற்கு ஏற்றார் போல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாக மத்திய அரசு தற்போது 3ம் கட்ட தளர்வுகளை அறிவித்துள்ளது.

மத்திய அரசின் 3ம் கட்ட தளர்வுகளில் பெற்றோர் மற்றும் மாணவர்களை குழப்பி வந்த முக்கிய பிரச்சனைக்கு தீர்வு கிடைத்துள்ளது. அதாவது ஆகஸ்ட் 31ம் தேதி வரை பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட மாட்டாது என உள்துறை அமைச்சகம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. அதேவேளையில் மெட்ரோ போக்குவரத்திற்கான தடை நீடிக்கும் என்றும், திரையரங்குகள், நீச்சல்குளங்கள், பூங்காக்கள் திறப்பதில் விதிக்கப்பட்ட தடை நீடிக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஊரடங்கு காரணமாக மாநிலங்களுக்குள் பயணிக்க கூட இ-பாஸ் தேவை என்ற நிலை நீடித்து வந்தது. இந்நிலையில் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் மாநிலங்களுக்கு உள்ளேயும், வெளியேயும் மக்கள் பயணிக்க இ-பாஸ் தேவையில்லை. அதேபோல் சரக்கு வாகனங்களுக்கும் இ-பாஸ் தேவையில்லை என மத்திய அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. ஆனால் இதுகுறித்து அந்தந்த மாநில அரசுகள் முடிவெடுத்துக்கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Share this:

Related posts

தலைமைச்செயலகத்தில் தீ… தங்க கடத்தல் ஆவணங்களை மறைக்க முயற்சியா?

MANIMARAN M

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு கொரோனா தொற்று… மருத்துவமனைக்கு செல்லும் முன் கூறிய அறிவுரை…!!

AMARA

கேரள விமான விபத்து: மத்திய, மாநில அரசுகள் இழப்பீடு அறிவிப்பு…!!

THAVAMANI NATARAJAN

பாஜகவின் முழுகட்டுப்பாட்டில் பேஸ்புக், வாட்ஸ்அப்… ராகுல் காந்தி பகீர் குற்றச்சாட்டு…

MANIMARAN M

ஸ்வீடனில் எதிரொலித்த தமிழக மாணவர்களின் கூக்குரல்… நீட் தேர்வுக்கு எதிராக முழங்கிய கிரேட்டா…!!

MANIMARAN M

ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி… 161 அடியில் பிரம்மாண்ட ஆலயம்…!!

AMARA