கொரோனா தொற்று அதிகளவில் பரவி வரும் சூழல் நிலவுவதால் நாடுமுழுவதும் ஆகஸ்ட் 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது, இதனால் அரசு அலுவலகங்கள் சரிவர செய்பட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வாகன ஓட்டுநர்கள் தங்களின் ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன பதிவு சான்றிதழ்களை புதுப்பிக்க முடியாமல் தவித்து வருகிறார்கள்.
இதனால் பல்வேறு இடங்களில் போக்குவரத்து காவலர்களிடம் அபராத தொகையை கட்டிவருகிறார்கள். கொரோனா தொற்று காரணமாகவும் ஓட்டுநர்களின் நலன் கருதியும் போக்குவரத்து அமைச்சகம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
மேலும் படிக்க:http://தமிழகத்தில் இ-பாஸ் முறை ரத்தா..? அரசின் முடிவு என்ன..?
இதில் தற்போது புதுபிக்க வேண்டிய ஒட்டுநர் உரிமம் மற்றும் வாகன ஆவணங்களை புதுபிக்க வேண்டிய காலத்தை டிசம்பர் 31ம் தேதி வரை நீட்டித்துள்ளதாக மத்திய போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பை போக்குவரத்து சம்பந்தபட்ட துறை அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளது.