Newskadai.com
தமிழ்நாடு

சூப்பர் குட் நியூஸ்: கொரோனாவை அடித்து விரட்டிய 100 வயது பாட்டி…!!

Share this:

கடும் மூச்சுத் திணறல் காரணமாக செங்கோட்டையை சேர்ந்த இசக்கி அம்மாள் என்ற மூதாட்டி தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருடைய வயதை கேட்டறிந்த மருத்துவர்கள் ஆச்சரியமடைந்தனர். இசக்கியம்மாளின் வயது 100. உடல் வெப்பம், சளி மாதிரி பரிசோதனைகளில் கொரோனா நோய் தொற்று தெரியவில்லை. பிறகு சிடி ஸ்கேன் எடுத்துப் பார்த்ததில் அவருடைய நுரையீரல் பாதிக்கப்பட்டு இருப்பதும் கொரோனா நோய் தொற்று ஏற்பட்டு இருப்பதும் கண்டறியப்பட்டது.

முதல் ஆறு நாட்கள் தீவிர நோய் சிகிச்சை பிரிவில் வைத்து அவருக்கு மருத்துவம் பார்த்த மருத்துவர்கள், கொரோனா தொற்றின் வீரியம் குறைந்த பின்பு சாதாரண வார்டுக்கு மாற்றினர். நேற்றைய தினம் அவர் பூரண குணம் அடைந்ததால் தென்காசி அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜெஸ்லின் மற்றும் மருத்துவ குழுவினர் 100 வயது மூதாட்டி இசக்கியம்மாளை வழியனுப்பி வைத்தனர்.

கொரோனாவிற்கு இன்னும் சரியான மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில் கொரோனா பாதித்த 100 வயது மூதாட்டி அதிலிருந்து மீண்டு வந்திருப்பது, மருத்துவ துறையினருக்கும், மக்களுக்கும் கொரோனா மீதான மரண பயத்தை போக்கி நம்பிக்கையை அளித்துள்ளது. காலத்தை வென்றவள்…. காலனை வென்றவள்….


Share this:

Related posts

காரைக்காலில் நிபந்தனை ஜாமினில் வெளி வந்த பெண் தாதா தலைமறைவு…

MANIMARAN M

கோவையில் பெண்ணிடம் செயின் பறிப்பு : திருடர்களை மடக்கிப் பிடித்த பொது மக்கள்..!!!

MANIMARAN M

“உள்ளங்களில் நல்லிணக்கம் நிலவ வாழ்த்துக்கள்”… முதல்வர், துணை முதல்வர் பக்ரீத் திருநாள் வாழ்த்து…!!

THAVAMANI NATARAJAN

காதலனுடன் ஓடிப்போன மகளுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய தந்தை…

MANIMARAN M

“வடிவேல் பாணியில் வாத்தியார்களைக் கலாய்த்த மாணவன்”… சமூக வலைதளங்களில் வைரலாகும் போஸ்டர்…

MANIMARAN M

ஒரே நாளில் 2வது நீட் தேர்வு மரணம்: தருமபுரி மாணவன் ஆதித்யா தூக்கிட்டு தற்கொலை…!!

NEWSKADAI