Newskadai.com
லைஃப் ஸ்டைல்

“தங்கமே உன்னத்தான் தேடி வந்தேன் நானே”… தங்கத்தை பற்றி யாரும் அறிந்திடாத தகவல்கள்…!

jewellery
Share this:

அதிக விலையுள்ள உலோகம் என்றால் நமக்கு தங்கம் தான் ஞாபகத்திற்கு வருகிறது. தங்கம் நம் வாழ்வின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது. நம்மை அலங்கரிக்கும் ஆபரணமாக நம் வீட்டு விஷேசங்களில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு குடும்பத்தின் செல்வ நிலையை மதிப்பிடக்கூடிய ஆடம்பர பொருளாகவே தங்கம் பார்க்கப்படுகிறது. அந்த தங்கத்தை பற்றி… வாங்க… கொஞ்சம் தெரிஞ்சிக்கலாம்…

நியூட்ரான் நட்சத்திரங்கள் இணையும்போது சிதறும் மீதங்கள் பில்லியன் டிகிரி வெப்பத்தில் உருவான சாம்பலே இன்று நமக்கு கிடைக்ககூடிய தங்கம், பிளாட்டினம் போன்ற தனிமங்கள் என்று கூறுகிறார் வார்விக் பல்கலைகழகத்தை சேர்ந்த ஜோலேமேன் என்ற ஆராய்ச்சியாளர். தங்கம் பெரும்பாலும் பூமிக்கடியில் ரேகைப் போல பாறைகளில் படிந்திருக்கும். பூமிக்கடியில் சுரங்கம் தோண்டி தங்கம் பாறைகளாக வெட்டி எடுக்கப்படுகிறது. அதிலிருந்து வேதியியல் முறையில் தங்கத்தை மட்டும் பிரித்தெடுக்கிறார்கள். பின்பு மின் பகுப்பு முறையில் தங்கம் சுத்தம் செய்யப்படுகிறது.

உலகில் கிடைக்கக்கூடிய தங்கத்தில் பாதி தென் ஆப்ரிக்காவில் வெட்டி எடுக்கப்படுபவை. இந்தியாவில் கர்நாடக மாநிலத்தில் கோலார் என்னுமிடத்திலும் தங்கம் கிடைக்கின்றது. தங்கம் AU என்ற  குறியீட்டால் குறிக்கப்படுகின்றது. காரட் என்ற அலகால் மதிப்பிடப்படுகின்றது. 24 காரட் என்பது சுத்த தங்கமாகும். 22 காரட் தங்கமே ஆபரணங்கள் செய்ய பயன்படுகிறது. தங்கம் வெப்பத்தை நன்கு கடத்தவல்லது. ஆதலாலே நுண்ணிய வேலைப்பாடுகளை தங்க ஆபரணங்களில் நாம் அதிகம் காணலாம்.

ஒவ்வொரு நாட்டின் நாணயச் செலவாணியிலும் தங்கம் பெரும் பங்கு வகுகின்றது. இருப்பு வைத்துள்ள தங்கத்தின் மதிப்பிற்கு ஏற்றவாரே அந்த நாடு நாணயங்களை வெளியிடுகின்றன. நாட்டு பொருளாதாரத்திலும் பெரும் வினையாற்றுகிறது தங்கம். அதனாலேயே தங்கத்தின் மீதான கட்டுபாடுகள் கடுமையாக இருக்கின்றன. தங்கத்தை வாங்குவது, விற்பது, போன்ற பரிவர்த்தனைகளிலும் வெளி நாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதிலும் அதிக கட்டுபாடுகளை விதித்துள்ளது அரசு. கச்சா எண்ணெய்க்கு அடுத்தப்படியாக தங்கம் இறக்குமதிக்கே அதிகளவு அந்நிய செலவாணி செலவிடப்படுகிறது.

மதிப்பு குறையாமல் மறுபயன்பாடு செய்யக் கூடிய ஒன்றாக தங்கம் இருக்கிறது, அவை அன்றைய சந்தை விலைக்கே மதிப்பிடப்படுகிறது. எனவே தங்கம் ஒரு சிறந்த முதலீடாகவும் கருதப்படுகிறது. இந்தியாவில் மத மற்றும் கலாச்சார தேவைகளுக்காக தங்கம் பெரிதளவில் வாங்கப்படுகிறது.

Gold bars and stok market

கச்சா எண்ணெய்க்கு அடுத்தப்படியாக தங்கம் இறக்குமதிக்கே அதிகளவு அந்நிய செலவாணி செலவிடப்படுகிறது. சேதமடைந்த பற்களை மாற்றவோ சரிபடுத்தவோ தங்கத்தை மருத்துவத் துறையில் உபயோகப்படுத்தின்றனர். இதன் காரணம் பாக்டீரியாக்களால் தங்கத்தை சேதப்படுத்த முடியாது என்பதே.

உலகத்தில் உள்ள மொத்த தங்கத்தின் அளவில் இந்திய இல்லத்தரசிகளிடம் 11% தங்கம் உள்ளதாக ஆய்வு கூறுகிறது. என் இல்லத்தரசி சொக்க தங்கம் என்று கூறும் கணவன்மார்களின் வாழ்க்கையோ என்றும் தங்கத்தைப் போல பொலிவாகவே இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை…


Share this:

Related posts

அத்திமுகத்தோனுக்கு பிறந்த நாள் விழா… தீராத வினையெல்லாம் தீர்க்கும் விநாயகர்…

THAVAMANI NATARAJAN

ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறப்பு

THAVAMANI NATARAJAN

சிறுகதை : காளியான பெருமாள் – முனைவர்.ஆதன் குமார்

NEWSKADAI

”அகரம்” சொல்லித் தரும் சிகரங்களே..!! ஆசிரியர் தின வாழ்த்துகள்…

THAVAMANI NATARAJAN

சத்தமில்லாமல் எகிறி நிற்கும் தங்கம் விலை… தலையில் கைவைத்து உட்கார்ந்த மக்கள்…!!

NEWSKADAI

சரசரவென குறைந்தது தங்கம் விலை… சவரனுக்கு இவ்வளவு கம்மியா?

NEWSKADAI