Newskadai.com
லைஃப் ஸ்டைல்

குழந்தை பேறு தரும் சஷ்டி விரதம்… எப்படி, எங்கு கடைபிடிக்க வேண்டும் தெரியுமா?

Share this:

குழந்தை வரம் வேண்டி காத்திருப்போர் முருகனை நினைத்து சஷ்டி நாளில் விரதம் இருந்தால் முருகனே குழந்தையாக பிறப்பார் என்பது ஐதீகம். சஷ்டி விரதமென்பது கந்த சஷ்டியான ஐப்பசி மாத சுக்கில பட்ச சஷ்டியில் துவங்கி வருடம் முழுவதும் வரும் இருபத்தி நான்கு சஷ்டிகளிலும் இவ்விரதத்தை கடைபிடிக்கவும் இதுவே மிகவும் சிறப்பானதாகும். சஷ்டி என்பது மாதத்தில் இரண்டு முறை வருவது வழக்கம் வளர்பிறை சஷ்டி, தேய்பிறை சஷ்டி என இரண்டு திதி வருவது வழக்கம்.

கஷ்டங்கள் நீங்கி சுபிக்‌ஷமான வாழ்க்கை வாழ வேண்டும் என்றால் சஷ்டியில் விரதம் இருப்பது நல்லது. மகா சஷ்டி என்பது கார்த்திகை மாதத்தில் வளர்பிறையில் வரும், மகா சஷ்டியில் அனைத்து முருகன் கோவில்களிலும் விழாவாக கொண்டாடப்படுகிறது அன்று லட்சக்கணக்கான பக்தர்கள் விரதமிருந்து தங்களது வேண்டுதல்களை வைத்து தரிசனம் செய்கிறார்கள். ரமணிய பஞ்சரத்னம், திருவிளையாடல் கதைகள், சண்முக சட்கம், முருகனின் மந்திரங்கள், திருபுகழ், சண்முக சட்கம் போன்றவற்றை நூல்களை படிக்கலாம் இவற்றை படிக்கும் பொழுது மனது தூய்மையடைந்து முருகன் அருள் பெறலாம்.

சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும் என்ற பழமொழிக்கு உண்மையான அர்த்தம் என்ன தெரியுமா? சஷ்டியில் விரதம் இருந்தால் அகம் எனும் பை சிறப்பாக மாறும் என்பது தான். சஷ்டி விரதம் குழந்தை பேறு இல்லாதவர்களுக்கு சிறப்பான பலன்களை அளிக்க கூடியது. குழந்தை இல்லாத பெண்கள் சஷ்டி விரதம் இருந்தால் கருப்பையில் குழந்தை தங்கும் என்பது ஒரு பொருளாகும்.

சஷ்டி விரதம் இருக்க விரும்புவோர் முதல் நாளே வீட்டை நன்றாக கழுவி சுத்தம் செய்ய வேண்டும். விரத நாளான்று அதிகாலையிலேயே எழுந்து நீராடி தூய்மையான ஆடைகளை அணிந்து கொண்டு, காலையிலும், மாலையிலும் பூஜை அறையில் விளகேற்றி, தெற்கிலோ, வடக்கிலோ அமர்ந்து முருகப் பெருமானை நினைத்து தியானம் செய்ய வேண்டும். அதன் பின்னர் பூஜையறையில் முருகனை ஆராதித்து வழிபட வேண்டும். சஷ்டி விரதத்தின் போது பக்தர்கள் உணவு உண்ணாமல் இருப்பது நல்லது. சிலர் தண்ணீரை மட்டும் குடித்தும், சில பழங்களை மட்டும் சாப்பிட்டும் விரதத்தை மேற்கொள்வர்.

குழந்தை பேறு வேண்டும் தம்பதிகள் குறிப்பாக கார்த்திகை மாதத்தில் வரக்கூடிய மகா சஷ்டியில் 6 நாட்களும் விரதம் இருப்பது விசேஷமானது.


Share this:

Related posts

நல்ல காரியங்கள் நடக்கும்… கண்பியூசே வேணாம், கரண்ட்கிட்ட கவனம் தேவை..!! இன்றைய ராசி பலன்கள்…

NEWSKADAI

வந்தாச்சு ஸ்மார்ட் கிளாஸ் டாய்லெட்… இனி கிளீனாக இருக்கான்னு உள்ள போய் பார்க்க வேண்டாம்…!!

MANIMARAN M

கஷ்டங்கள் போக்கும் கருட பஞ்சமி… இந்த வழிபாட்டை இன்று கட்டாயம் செய்யுங்கள்…!

NEWSKADAI

தமிழ்நாட்டில் பரிசோதிக்கப்படும் கொரோனா தடுப்பு மருந்து..

NEWSKADAI

சேமிக்கிற காசை டபுளாக்க இப்படியெல்லாம் வழியிருக்கா?… இதுவரைக்கும் இதெல்லாம் தெரியாமல் போச்சே…!

NEWSKADAI

சங்கடங்களை தீர்க்கும் சங்கடஹர சதுர்த்தி….!!

THAVAMANI NATARAJAN